உடனடி எடைக்குறைப்புக்காக சிலர் திடீரென்று ஸ்கிப்பிங் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்த ஸ்கிப்பிங் பயிற்சி அனைவருக்கும் ஏற்றதா? இதனால் வேறு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? ஃபிட்னெஸ் பயிற்சியாளர்கள் சொல்லும் விளக்கம் என்ன?
“ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் எந்தவிதமான பாதக விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், புதிதாக ஸ்கிப்பிங் பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்கள், மெதுவாகச் செய்ய வேண்டும்.
சிலர் ஆர்வக்கோளாறின் காரணமாக எடுத்த எடுப்பிலேயே ஆயிரம் ஸ்கிப்பிங் மாதிரியெல்லாம் செய்வதுண்டு.
எனவே, முதல் நாளே அளவுக்கதிகமாகச் செய்வதைத் தவிர்த்து, உங்கள் உடற்பயிற்சிகளோடு சேர்த்து 100 முறை போன்று ஸ்கிப்பிங் செய்வதை வழக்கமாக்கலாம்.
வெறும் தரையில் ஸ்கிப்பிங் செய்வது, தவறி விழச் செய்யலாம், மூட்டுவலியை ஏற்படுத்தலாம். அதேபோல ரொம்பவும் உயரமாக ஜம்ப் செய்து ஸ்கிப்பிங் செய்தாலும் உங்கள் மூட்டு பாதிக்கப்படலாம்.
ஸ்கிப்பிங் மிகச் சிறந்த கார்டியோ பயிற்சியும்கூட. எடையைக் குறைக்க நினைப்பவர்கள் ஸ்கிப்பிங்குடன், ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யும்போது சீக்கிரம் பலன் தெரியும்.
ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கும் முன், அது உங்களுக்கு சிரமமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூட்டு மற்றும் கணுக்கால்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் ஸ்கிப்பிங் செய்வதைத் தவிர்க்கவும். அதை மீறிச் செய்தால் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.
ஸ்கிப்பிங் செய்யும் சரியான முறையைத் தெரிந்துகொண்டு, நல்ல தரையில், சரியான ஷூஸ் அணிந்தபடி செய்ய வேண்டியது முக்கியம். சிறிய வயதில் ஸ்கிப்பிங் செய்தது போலவே இப்போதும் செய்யலாம் என நினைத்துக்கொண்டு செய்ய வேண்டாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கேரட் சட்னி
இந்தியா எப்படி வல்லரசாகும்?… அப்டேட் குமாரு
குழந்தைகள் நினைவாற்றல், உயர்கல்வி மாணவர் சேர்க்கை… திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியீடு!
தமிழக நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
விஜயகாந்துக்கு வில்லன் கேரக்டர்… பா.ரஞ்சித் சொன்ன செம்ம ஸ்டோரி!