காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்பது விவாதத்துக்குரிய கேள்வியாகத் தொடர்வதைப் போலவே, இரவு உணவைத் தவிர்ப்பது நல்லதா, கெட்டதா என்பதும் விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது. இரவு உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது எனப் புதிய தகவல் ஒன்று சமீப காலமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை… இரவு உணவைத் தவிர்ப்பது எடைக்குறைப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுமா?
`ராஜாவைப் போல காலை உணவு, இளவரசரைப் போல மதிய உணவு, ஏழையைப்போல இரவு உணவு சாப்பிட வேண்டும்’ என்றொரு வாசகத்தைக் காலங்காலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்று ஆராய்வதைவிடவும், ஒவ்வொருவருடைய ஆரோக்கிய இலக்கைப் பொறுத்து அவரவர் தேவைக்கான ஊட்டச்சத்துகளும் உணவுமுறையும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே சரி.
இரவு உணவைத் தவிர்ப்பதால் என்ன நடக்கும்?
தூக்கம் பாதிக்கப்படும்.
ரத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால் மனப்பதற்றம் அதிகரிக்கும்.
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டு, நள்ளிரவில் உணவுத் தேடல் ஏற்படும்.
முறைதவறிய உணவுப் பழக்கத்தின் காரணமாக, அசிடிட்டி, அல்சர் மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகள் வரலாம்.
எனர்ஜி லெவல் குறைந்து, மறுநாள் காலையில் கண்விழிக்கும்போது புத்துணர்வில்லாமல் உணரவைக்கும்.
‘இரவில் எனக்கு வழக்கமான உணவுகளைச் சாப்பிடப் பிடிப்பதில்லையே’ என்பவர்கள் என்ன செய்யலாம்?
நிறைய காய்கறிகள் சேர்த்துச் செய்த சூப் ஒரு கிண்ணம் குடிக்கலாம்.
மிக்ஸட் வெஜிடபுள் சாலட் மற்றும் ஒரு பழம் சாப்பிடலாம்.
வெஜிடபுள் சாண்ட்விச் சாப்பிடலாம்.
பால் சேர்த்த தானியக் கஞ்சி குடிக்கலாம்.
பிரெட் டோஸ்ட் மற்றும் ஆம்லெட் சாப்பிடலாம்.
பருப்பு ரசம் சேர்த்த குழைவான சாதம் சாப்பிடலாம்.
இன்னொரு பிரிவு மக்களும் நம்மிடையே உண்டு. காலை உணவையோ, மதிய உணவையோ ஆற, அமர ருசித்துச் சாப்பிட நேரமில்லாதவர்களுக்கு இரவு உணவுதான் பிரதானம். அப்படிப்பட்டவர்கள்…
இரவு உணவு பேலன்ஸ்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
இரவு உணவின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அந்த உணவைச் செரிக்க உங்களுக்கு இருக்கும் நேரம் மிகக் குறைவு என்பதை நினைவில் கொள்ளவும்.
உணவின் தரத்தில் எந்த காம்ப்ரமைஸும் வேண்டாம்.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு சேர்த்த உணவுகள் வேண்டாம்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்து விடவும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.
கிச்சன் கீர்த்தனா: நவதானிய கட்லெட்
கிச்சன் கீர்த்தனா: வரகரிசி சொஜ்ஜி
கலைஞர் மகனை நம்பினோம்! நடுத்தெருவில் நிற்கிறோம்… ஆசிரியர்கள் குமுறல்!