மலையாளத் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்குபவர் மகேஷ் நாராயணன். சுமார் 45 திரைப்படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். டேக் ஆஃப், சி யூ சூன், மாலிக், அறியிப்பு ஆகிய நான்கு திரைப்படங்கள் மற்றும் மனோரதங்கள் எனும் ஆந்தாலஜி படத்தின் ஒரு பாகத்தை இயக்கியவர். மம்முட்டி – மோகன்லால் – குஞ்சாக்கோ போபன் – பகத் பாசில் – நயன்தாரா நடிப்பில் ‘ஏஜேஎஃப்சி_எம்எம்எம்என்’ என்ற தற்காலிகப் பெயர் கொண்ட திரைப்படத்தைத் தற்போது இவர் இயக்கி வருகிறார். is salman khan replace in kamalhaasan story
இதற்கடுத்ததாக, சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இந்தியில் ‘ஃபேண்டம் ஹாஸ்பிடல்’ எனும் படத்தை மகேஷ் நாராயணன் இயக்கப் போகிறாராம். இது ஒரு ‘ஆக்ஷன் த்ரில்லர்’ கதை என்று சொல்லப்படுகிறது.
மகேஷ் நாராயணன் இந்தியில் அறிமுகம் ஆகவிருக்கிற இத்திரைப்படம் பிரமாண்டமான முறையில் தயாராவதாகவும், படு கமர்ஷியலான படைப்பாக இருக்குமென்றும் தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. மிக கமர்ஷியலான படமாக அமையப் போகிறது.
’விக்ரம்’ படம் வெளியான காலகட்டத்தில், அடுத்ததாக மகேஷ் நாராயணன் நடிப்பில் கமல் நடிப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. அதன்பிறகு, அந்த புராஜக்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ‘தக் லைஃப்’ நோக்கி கமல் நகர, மகேஷ் நாராயணனோ தான் இயக்குகிற மலையாள மல்டி ஸ்டாரர் படம் நோக்கிச் சென்றுவிட்டார்.
ஆதலால், ’சல்மான் கான் நடிக்கப் போகிற திரைப்படம் கமலுக்கு மகேஷ் நாராயணன் சொன்ன கதையா’ என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. சமூகவலைதளங்களில் இது பற்றிய விவாதம் பெருகும்போது மகேஷ் அல்லது சம்பந்தப்பட்ட படக்குழுவினர் உரிய பதிலை அளிப்பார்கள் என்று நம்பலாம்..!