பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ‘ரெட்டினால் ஆன்ட்டி ஏஜிங் க்ரீம்’… எல்லோருக்கும் ஏற்றதா?

Published On:

| By Selvam

முகச்சருமம் வயதான தோற்றமடையாமல் தடுப்பதற்கு பலரும் ரெட்டினால் எனும் ஆன்ட்டி ஏஜிங் க்ரீமைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இது எல்லாருக்கும் ஏற்றதா? எந்த வயதிலிருந்து பயன்படுத்தலாம்? சருமநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரெட்டினால் எனப்படுவது வைட்டமின்-ஏ யிலிருந்து பெறப்படுவது. இதில் மிகச் சிறப்பான ஆன்ட்டி ஏஜிங் மூலக்கூறு இருக்கிறது.

இது நம் சருமத்தில் உள்ள கொலாஜன் எனும் புரதத்தை தூண்டி, அதை உற்பத்தி செய்யவைத்துக் கொண்டேயிருக்கும். இப்படி புதிதாக கொலாஜன் உற்பத்தியாக ஆரம்பிக்கும்போது சருமத்தின் மேலே இருக்கும் இறந்த ஸ்கின் செல்கள் நீக்கப்பட்டு, புதிதாக செல்கள் கட்டமைக்கப்படும்.

இதன் காரணமாக, தளர்வடையும் சருமம் இறுக்கமாகவும், நீட்சியடையும் தன்மையுடனும் மாறும். ரெட்டினால் நம் சருமத்தில் நிகழ்த்தும் மேஜிக் இதுதான்.

இந்த ரெட்டினால் க்ரீமை கல்லூரி மாணவிகள் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், ஏற்கெனவே கொலாஜன் நிறைவாக உற்பத்தியாகி, சிறப்பாக இருக்கும் சருமத்திற்கு ரெட்டினால் போன்ற ஆன்ட்டி ஏஜிங் க்ரீம்கள் தேவையேயில்லை. 28, 30 வயதுக்கு மேல் பயன்படுத்தத் தொடங்குவதே சரியானது.

ரெட்டினால் ஆன்ட்டி ஏஜிங் க்ரீமை பயன்படுத்துவதில் சில வரையறைகள் உள்ளன. அதாவது, இதை இரவு நேரத்தில்தான் பயன்படுத்த வேண்டும். காலை நேரத்தில் பயன்படுத்தக் கூடாது.

பொதுவாகவே, இந்த ரெட்டினால் ஒரு ஸ்ட்ராங்கான க்ரீம். எனவே, காலை நேரத்தில் அப்ளை செய்யும்போது வெயிலோடு இந்த ரெட்டினால் வினைபுரிந்தால் இது அதிகமான எரிச்சலைக் கொடுத்துவிடும். எனவே, இரவு நேரத்தில் மட்டுமே இந்தக் க்ரீமைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிறிய பட்டாணி அளவு ரெட்டினாலை மட்டுமே எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகள், மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகள், மற்றும் உதட்டின் மேலேயுள்ள மென்மையான பகுதிகளில் இந்த ரெட்டினாலை அப்ளை பண்ணக் கூடாது. கன்னங்கள், நெற்றி மற்றும் கழுத்து போன்றவற்றில் மட்டும் இதைப் பயன்படுத்தலாம்.

முகத்தைக் கழுவி ஈரம் போக நன்கு உலரவிட்டு பின்பு, முகத்தில் மெல்லிய லேயராக மாய்ஸ்சரைஸர் ஒன்றை அப்ளை பண்ணுங்கள். அடுத்ததாக, ரெட்டினால் சீரத்தை மெலிதாக அதன் மேல் அப்ளை பண்ணுங்கள்.

கடைசியாக, மீண்டும் அதன் மேல் மெலிதாக மாய்ஸ்சரைஸரை அப்ளை பண்ணுங்கள். இப்படித்தான் இந்தக் க்ரீமை பயன்படுத்த வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ரெட்டினால் ஆன்ட்டி ஏஜிங் க்ரீமை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் ஒரு சரும நிபுணரைக் கலந்து ஆலோசியுங்கள்.

உங்கள் சருமத்திற்கு ரெட்டினால் ஜெல், ரெட்டினால் சீரம் அல்லது க்ரீம் போன்றவற்றில் எதைப் பயன்படுத்துவது சிறந்தது என்பது குறித்தும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முறையான ஆலோசனைகளை அவர் வழங்குவார்’’ என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கமல் பாடல் வெளியீட்டு விழா… ரஜினி பட அப்டேட் கொடுத்த லோகேஷ்

கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஃப்ரூட் சாலட்

காற்று மாசு ஏற்படுத்தியதால் கெஜ்ரிவால் கைது: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: நயினாருடன் கள்ளத் தொடர்பில் திமுக நிர்வாகிகள்- ஸ்டாலின் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share