மதுரை முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பா? உண்மை என்ன?

Published On:

| By Minnambalam Desk

Rajinikanth Murugan Conference

மதுரையில் ஜூன் 22-ந் தேதி நடைபெறும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ந் தேதி பிரம்மாண்டமான முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், முருகன் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தியை மறுத்துள்ளார். இது தொடர்பாக ரியாஸ் அகமது தமது எக்ஸ் பக்கத்தில், வரும் ஜூன் 22ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது . தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share