உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசிப் பொரி சாப்பிடுவது நல்லது என்று நினைக்கிறார்கள். இது உண்மையா? வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்ஸ் சொல்லும் பதில் என்ன?
“பொரி நிச்சயம் டயட் உணவு அல்ல. 100 கிராம் அரிசியை சாதமாக வடித்துச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அதுவே 100 கிராம் பொரியை சாப்பிட்டால் அந்த உணர்வு ஏற்படாது. அரிசிப் பொரியில் உள்ள இரும்புச்சத்தின் காரணமாக, அது ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு உகந்தது. அரிசிப் பொரிக்கும், அரிசிக்கும் கார்போஹைட்ரேட் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் எடைக் குறையும் என்று சொல்ல முடியாது.
100 கிராம் அரிசி பொரி என்பது அதிகமான அளவு என்பதால் அதன் மூலம் சேரும் கார்போஹைட்ரேட்டின் அளவும் மிக அதிகம். எனவே, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து தேவைக்காக வேண்டுமானால் பொரி சாப்பிடலாம். அதுவும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் போதும்.
முறுக்கு, தேன்குழல், சிப்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுவதற்கு பதில் அரிசிப் பொரியை நொறுக்குத்தீனியாகச் சாப்பிடுவது நல்லது. ஆனால், பொரியில் ஓமப்பொடி, தட்டை போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து, ஒரு டீஸ்பூன் வேர்க்கடலையையும் சேர்த்து வறுத்து, அதில் ஒரு கைப்பிடி அளவு பொரியையும் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துச் சாப்பிடலாம்.
எனவே, அரிசிப் பொரி சாப்பிடுவதால் உடல் எடை குறையாது. ஆரோக்கியமற்ற மற்ற நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதற்கு இது ஓரளவு ஓகே, அவ்வளவுதான். பொரியில் அதிக அளவு சோடியம் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். எனவே, அளவு தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அலுப்புக் குழம்பு
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை- கைதானவர் திமுக பிரமுகரா?: புகைப்படம் வெளியிட்ட அண்ணாமலை
இதுக்கெல்லாம் வெட்கப்படலாமா… அப்டேட் குமாரு
தரையிறங்க 3 நிமிடம்தான்: தீ பற்றி விழுந்த விமானம்… 67 பேர் கதி என்ன?