ஒரே படத்தின் மூலம் நம்பிக்கையான இயக்குனர்கள் லிஸ்டில் சேர்ந்தவர் அஷ்வத் மாரிமுத்து. அசோக்செல்வன் நடிப்பில் அவர் இயக்கிய ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
அஷ்வத் அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் இணைந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம், லவ் டுடே படத்தின் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவித்தார்.
ஒரே கல்லூரியில் படித்த இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர்களாக இருந்துள்ளனர். அப்போதே முடிவு செய்த விஷயம் தான் இந்த திரைப்படம் என்று நகைச்சுவையான ப்ரோமோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் சிம்புவுக்கு எழுதிய கதையில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார் என்று அவரது ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வந்தனர். இதற்கு அஷ்வத் மாரிமுத்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் “அனைத்து சிம்பு ரசிகர்களுக்கும். இந்த படத்தின் அறிவிப்பை பார்த்தவுடன் சிம்பு சார் தான் முதலில் போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை பார்த்துவிட்டு ஒன்றரை மணி நேரம் என்னைப் பாராட்டினார்.
https://twitter.com/Dir_Ashwath/status/1778698306132312110
சிம்பு சாருக்கு நான் வைத்திருக்கும் கதை வேறு. அவர் தயாராக இருக்கும்பொழுது நிச்சயம் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்”, என்று தெரிவித்து இருக்கிறார்.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவேசம் படத்திற்கு தடை… வெடித்தது சர்ச்சை!