ஒரு பான் இந்தியா ஹீரோ தன்னிடம் தவறாக நடந்துகொண்ட போது அவரை அறைந்துவிட்டதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, தமிழில் பீஸ்ட், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தற்போது விஜய்யுடன் சேர்ந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், குறிப்பிட்ட ஒரு பேட்டியில், “ஒரு பெரிய திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது பான் இந்தியா நடிகர் ஒருவர் தனது கேரவனுக்குள் அனுமதியின்றி நுழைந்து தகாத முறையில் நடந்துகொண்டார். இதனால் அவரது கன்னத்தில் அறைந்துவிட்டேன். அதன் பிறகு அந்த நடிகரும் நானும் இணைந்து நடிக்கவே இல்லை” என்று கூறியதாக செய்திகள் பரவுகிறது.
அவர் எந்த சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார் என்ற விவரம் இல்லை.
இந்தசூழலில் “ராதே ஷ்யாம்” படப்பிடிப்பின் போது நடிகர் பிரபாஸுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் பரவின. இந்த தகவலுடன் ஒப்பிட்டு அந்த நடிகர் பிரபாஸா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இப்படி செய்திகள் பரவி வரும் நிலையில் பூஜா ஹெக்டே தற்போது வரை இதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
அதேசமயம் ஹாலிவுட், பாலிவுட், தென்னிந்தி திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் ரமேஷ் பாலா இந்த தகவலை மறுத்துள்ளார். இது 100 சதவிகிதம் பொய் என்றும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
