எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒரே விமானத்தில் டிக்கெட் புக் செய்திருக்கின்றனர். is ops eps travel in same flight
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார்.
அதன்பிறகு அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என விவாதங்கள் நடந்து வருகிறது.
இந்தநிலையில், நெல்லையில் மறைந்த அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்புசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே நேற்று இரவே நெல்லை சென்ற முன்னாள் முதல்வர் ஓபன்னீர் செல்வம் இன்று காலை கருப்புசாமி பாண்டியன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்தசூழலில் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு ஓபிஎஸும், ஈபிஎஸும் ஒரே விமானத்தில் டிக்கெட் புக் செய்திருக்கின்றனர்.
இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்டு டிக்கெட் புக் செய்யப்பட்டதா என பேச்சுக்கள் எழுந்த நிலையில், ஓபிஎஸ் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அவர், தனது விமான டிக்கெட்டை கேன்சல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
முன்னதாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பிரிந்தது பிரிந்ததுதான். இனி ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை” என்று பேட்டி அளித்துவிட்டு, தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தடைந்தார். ps travel in same flight