தொடங்கியது ஆசியக்கோப்பை: தடுமாறும் பாகிஸ்தான்

Published On:

| By christopher

தனது சொந்தமண்ணில் தொடங்கியுள்ள ஆசியக்கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கெதிரான தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 16வது ஆசியக் கோப்பை இன்று (ஆகஸ்ட் 30) தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட 6 அணிகள் பங்குகொள்ளும் தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்துகின்றன. முதல் போட்டியில் ஆசிய கோப்பை தொடரில் முதன்முறையாக களமிறங்கும் நேபாளத்தை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

கடந்த 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆசிய கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானால் ஆசிய கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் சொந்த நாட்டு ரசிகர்களின் ஆதரவு மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி என்ற சாதகமான பலத்துடன் இருப்பதால் அந்த அணி  மூன்றாவது கோப்பையை குறிவைக்கும்.

ADVERTISEMENT

முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பாடகி ஐமா பெய்க் மற்றும் நேபாளத்தின் திரிஷாலா குருங் ஆகியோர் தங்கள் பாடல்களால் கூட்டத்தை மகிழ்வித்தனர்.

மாலை 3 மணிக்கு தொடங்கியுள்ள இரு அணிகள் இடையேயான முதல் போட்டியிலேயே தங்களது ஆதிக்கத்தை செலுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

ஆனால் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, கத்துக்குட்டி அணியாக கருதப்படும் நேபாளம் அணியின் பந்துவீச்சில் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டுள்ளது.

பாகிஸ்தான் தொடக்கவீரர்களான ஃபக்கர் அசாம்(14) மற்றும் இமாம் உல் ஹக்(5) இருவரும் முதல் 6 ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

https://twitter.com/nomadic_med/status/1696826101258125813?s=20

இதனால் முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கும் வெறும் 44 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. களத்தில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அணியை மீட்கும் முயற்சியில் மெதுவாக விளையாடி வருகின்றனர்.

அசுர பலத்துடன் இருக்கும் அணிகளும் சில சமயங்களில் கத்துக்குட்டி அணிகளிடம் அதிர்ச்சி தோல்வியை சந்திக்கும். அதே போன்று சம்பவத்தை தற்போது நேபாளம் கொடுக்குமா? இல்லை சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்துமா என்பது போட்டியின் முடிவில் தெரியவரும்.

இதற்கிடையே இலங்கையின் பல்லேகலேவில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ள தொடரின் முதல் போட்டியை எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

காவல்நிலையத்தில் காணாமல் போன செல்போன்கள்: திருடர்கள் கைவரிசை?

ஜாவன் இசை வெளியீட்டு விழா: சென்னை வந்தார் ஷாருக்கான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share