2014ஆம் ஆண்டுக்கு பிறகு அகமதாபாத் மோடி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்ற தகவல் அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. Is Modi Stadium a death trap for Mumbai Indians?
நடப்பு ஐபிஎல் தொடரில் கோப்பை எந்த அணிக்கு என்பதை உறுதி செய்ய இன்னும் இரண்டு போட்டிகளே மீதம் உள்ளன.
அதன்படி, குவாலிபயர் 1-ல் பெங்களூருவிடம் மோசமாக தோற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியும், எலிமினேட்டரில் குஜராத்தை போராடி வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குவாலிபயர் 2-ல் இன்று (ஜூன் 1) மோதுகின்றன.
லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்வதில் தீவிரமாக உள்ளது.
அதே போன்று, ஆரம்ப போட்டிகளில் அடுத்தடுத்து கிடைத்த தோல்விகளுக்கு மத்தியில், வீறு கொண்டு எழுந்து பிளே ஆஃப்-க்கு தகுதி பெற்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.

மும்பை மோசமான சாதனை! Is Modi Stadium a death trap for Mumbai Indians?
எனினும் அகமதாபாத் மைதானத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மும்பை அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்ற தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசமான சாதனை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நம்பிக்கை அளிக்கும் என கருதப்படுகிறது.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில், மும்பை அணி ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
கடைசியாக 2014 ஆம் ஆண்டு ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தி இருந்தது.
மேலுடம் கடந்த ஆண்டு லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளதால், பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் 7 போட்டிகளில் நான்கு முறை 2வது பேட்டிங் செய்த நிலையில் அனைத்து போட்டியிலும் மும்பை தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டி முடிவுகள் :
செப்டம்பர் 23, 2013 | மும்பை இந்தியன்ஸ் vs ஒடாகோ வோல்ட்ஸ் | போட்டி ரத்து |
மே 19, 2014 | மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி |
ஏப்ரல் 14, 2015 | மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி |
ஏப்ரல் 25, 2023 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி |
மே 26, 2023 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி |
மார்ச் 24, 2024 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி |
மார்ச் 29, 2025 | மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி |
மும்பைக்கு மழையும் ஒரு எதிரணி தான்! Is Modi Stadium a death trap for Mumbai Indians?
மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மழையும் எதிராளி தான். அதாவது மழையின் காரணமாக போட்டி ரத்தானால், புள்ளிகள் பட்டியலில் அதிக பாயிண்ட் பெற்றுள்ள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அப்படி நடந்தால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள பஞ்சாப் அணி நேரடியாக இறுதிப்போட்டி தகுதி பெறும்.
எனினும் அக்யூவெதரின் கூற்றுப்படி, இன்றைய போட்டியின் போது மழை பெய்ய குறைவான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மும்பை அணி ரசிகர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.
எனவே வரலாறை மாற்றி எழுத மும்பை அணியும், முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்ற பஞ்சாப் அணியும் போராடும் என்பதால் இந்த போட்டியில் பஞ்சமிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.