பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில் நடிகர் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
முன்னதாக வெளியான “தங்கலான்” படத்தின் டீசரில் நடிகர் விக்ரமின் தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்தது.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜுலை 10) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் தனது கிராமத்து மக்களுடன் பேசி கொண்டிருக்கும் இடத்தில் கரும்புலி ஒன்று நுழைவதாக முதல் காட்சி தொடங்குகிறது. அதன்பின்னர் 2.09 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர் பரபர என விறுவிறுக்கிறது.
இதனைக் கண்ட ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். விக்ரமின் மற்றுமொரு உருமாறிய தோற்றத்துடன் கூடிய நடிப்பும், சூனியக்காரியாக மிரட்டும் மாளாவிகா மோகனனும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பிரிட்டிஷாரின் பேச்சை கேட்டு தங்கத்தை எடுக்க செல்லும் விக்ரமை தடுத்து நிறுத்தி, அவரை பிரிட்டிஷாருக்கு எதிராகவே போராட செய்யும் சூனியக்காரியாக மாளாவிகா இருப்பார் என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.
கோலார் தங்க வயலை அடிப்படையாக கொண்டு பா.ரஞ்சித் மீண்டும் அழுத்தமான கதையை கொண்டுவந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கலான் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், டிரெய்லரிலும் இடம்பெறவில்லை. எனினும் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மலர் டீச்சர்… சாய் பல்லவிக்கு பதில் நடிக்க வேண்டியது யார் தெரியுமா?