பியூட்டி டிப்ஸ் : தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது சரியா, தவறா?

Published On:

| By Selvam

right or wrong to avoid putting oil on the head?

சிலர் பல வருடங்களாகத் தலைக்கு எண்ணெய் வைக்க மாட்டார்கள். ஆனாலும் முடி கறுப்பாகவே இருக்கும். ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்கள் தினமும் எண்ணெய் வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள். இந்த நிலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது சரியா, தவறா? right or wrong to avoid putting oil on the head?

“தலையில் எண்ணெய் வைத்தால் தோற்றமே மாறிப்போகிறது என்ற நினைப்பில் இன்று பலரும் அதைத் தவிர்க்கிறார்கள் அல்லது பெயருக்கு நான்கைந்து துளிகளைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

கூந்தல் என்பது `கெரட்டின்’ என்ற புரதத்தால் ஆனது. இந்தப் புரதம் நிறமற்றது. `ஹேர் ஃபாலிகிள்ஸ்’ எனப்படும் கூந்தலின் நுண்ணறைகளில் `மெலனோசைட்ஸ்’ எனப்படும் நிறமி செல்கள் இருக்கும். அவைதான் மெலனினை உற்பத்தி செய்பவை.

அந்த மெலனின்தான் கூந்தலின் கருமைக்குக் காரணம். வயதாக, ஆக மெலனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால்தான் கூந்தல் நரைக்கிறது. ஆனால், எண்ணெய் வைப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம்.

தலைக்கு எண்ணெய் வைப்பதும், எண்ணெய்க் குளியல் எடுப்பதும் காலங்காலமாகப் பின்பற்றப்படுகிற விஷயங்கள்.

முடி வளர்ச்சிக்கு மட்டுமன்றி, உடல் வலிமைக்கும் இவை அவசியம். எண்ணெய் வைத்துக் குளிப்பதால் கூந்தலின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு நிறமி செல்களுக்கு ஊட்டம் அளித்து, முடி வளர்ச்சி தூண்டப்படும். ஆனால், இன்றைய பெண்கள் எண்ணெய் வைப்பதையும், எண்ணெய்க் குளியலையும் விரும்புவதே இல்லை.

கூந்தலுக்கு எண்ணெய் வைப்பதும் எண்ணெய்க் குளியல் எடுப்பதும், இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம். நம்முடைய உணவில் பி 12 குறைபாடு அதிகரித்து வருகிறது.

வசதி, நேரமின்மை காரணமாக ஷாம்பூ குளியல் எடுத்து, கூந்தலின் பி.ஹெச் அளவைக் குறைத்துக் கொள்கிறோம். அதை ஈடுகட்ட எண்ணெய் தேய்ப்பது அவசியம்.

எண்ணெய்க் குளியல் என்பது மன அழுத்தத்தையும் குறைக்கும். தவிர பொடுகு, பூஞ்சைத் தொற்று போன்ற பிரச்னைகளில் இருந்தும் காக்கும்.

வாரம் ஒரு முறையாவது தலையில் எண்ணெய் வைத்து அரை மணி நேரம் ஊறி, பிறகு ஷாம்பூ குளியல் எடுக்கலாம். அதனால் கூந்தல் வறட்சி தவிர்க்கப்படும். நரைக்காது.

எண்ணெய் வைக்கவென ஒருமுறை இருக்கிறது. மண்டைப் பகுதியில் வேர்க்கால்களில்படும்படி லேயர், லேயராக கூந்தலைப் பிரித்து எண்ணெய் தடவ வேண்டும்.

கூந்தல் நுனிவரை தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறி, பிறகு அலச வேண்டும். பகலில் எண்ணெய் வைக்கப் பிடிக்காதவர்கள், இரவில் தலைக்கு எண்ணெய் தடவி, மசாஜ் செய்யலாம்.

தலையணையின் மீது ஒரு துணியை விரித்துவிட்டுப் படுக்க வேண்டும். மறுநாள் காலையில் தலைக்குக் குளிப்பது இன்னும் சிறந்தது” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். right or wrong to avoid putting oil on the head?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சீஸ், அன்னாசி மற்றும் செர்ரி ஸ்டிக்

அயோத்தி கோவில்: அப்டேட் குமாரு

தெரு தெருவாக படத்திற்கு புரோமோஷன் செய்யும் ஹரிஷ் கல்யாண்

சி.எஸ்.கே-வில் இருந்து விடுவிக்கப்படுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share