ஹெல்த் டிப்ஸ்: திடீர் மயக்கத்துக்கு இனிப்பு சாப்பிடுவது சரியானதா?

Published On:

| By christopher

சிலருக்கு திடீர் மயக்கமும், உடலில் நடுக்கமும் ஏற்படும் உடனே இனிப்புப் பொருட்களைச் சாப்பிடுவார்கள். இது சரியானதா? நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?

‘ஹைப்போகிளைசீமியா’ எனப்படும் தாழ்சர்க்கரை நிலை (லோ சுகர்) குறித்து முக்கியமாக நீரிழிவு நோயாளிகளும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரத்தச் சர்க்கரையின் அளவானது 80 மில்லிகிராமைவிட குறையும்போது உடல் அதற்கான அறிகுறிகளைக் காட்டும். அதுதான் தாழ்சர்க்கரை நிலை. அந்த நிலையில் கை, கால்களில் நடுக்கம், படபடப்பு, குளித்தது போன்ற அதீத வியர்வை, வாய் குழறுவது, கண்கள் இருட்டிக்கொள்வது, பேச முடியாதது என பல அறிகுறிகள் தோன்றலாம்.

இப்படி ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அலட்சியம் செய்தால் மிகப்பெரிய மெடிக்கல் எமர்ஜென்சியாக மாறக்கூடும்.

அறிகுறிகளை உணர்ந்ததும் வீட்டில் குளுக்கோமீட்டர் இருந்தால் அதில் பரிசோதித்து, ரத்தச் சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

குளுக்கோமீட்டர் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும்போது ஒரு டம்ளர் தண்ணீரில் 2-3 டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்து குடித்தால் உடனே ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

வாகனம் ஓட்டும்போது சிலருக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும். இன்னும் சில நிமிடங்களில் வீடு போய்ச் சேர்ந்துவிடுவோம்… போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சியம் மட்டும் வேண்டாம்.

ஐந்து நிமிடங்களில்கூட பேராபத்து நிகழலாம். விமானம் ஓட்டும்போது பைலட்டுக்கு லோ சுகர் ஆகி, விமானம் கீழே விழுந்த வரலாறெல்லாம் நம்மிடம் உண்டு. அந்த அளவுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தாழ்சர்க்கரை நிலை பிரச்சினை.

லோ சுகர் பிரச்னையைத் தவிர்க்க சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். நீரிழிவாளர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளுக்கு ரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைப்பதுதான் பிரதான வேலை. நீங்கள் சாப்பிட்டீர்களா, இல்லையா என்றெல்லாம் அவை பார்க்காது.

மாத்திரைகளை எடுத்துக்கொண்டு சாப்பிடாமல் இருப்பது, மாத்திரை போட்டுக்கொண்டு தாமதமாகச் சாப்பிடுவது, இனிப்பு சாப்பிட்டுவிட்டு, ஒரு மாத்திரையை எக்ஸ்ட்ராவாக எடுத்துக்கொள்வது என்றெல்லாம் மாத்திரைகளையும் உணவையும் தவறாகக் கையாளும்போதுதான் இந்தப் பிரச்சினை வருகிறது.

முதல்முறை லோ சுகர் வரும்போது உணர்ந்த அறிகுறிகளைத்தான் ஒவ்வொரு முறையும் உணர்வார்கள். அதை உணர்ந்ததும் உடனே எச்சரிக்கையாவதுதான் புத்திசாலித்தனமானது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : பட்ஜெட் தாக்கல் முதல் கங்குவா முதல் சிங்கிள் ரிலீஸ் வரை!

கிச்சன் கீர்த்தனா : சோயா பீன்ஸ் இட்லி

மீண்டும் அதே அல்வாவை கிண்டிருவாங்களோ? அப்டேட் குமாரு

சென்னையில் மீண்டும் மினி பஸ்… போக்குவரத்துக் கழகம் கட்டுப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share