சிலர் எத்தனை வயதானாலும் பேபி சோப், பேபி ஷாம்பூ, பேபி பவுடர் என குழந்தைகளுக்கான பொருட்களை உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அது சரியா… சருமநல மருத்துவர்களின் பதில் என்ன?
“நிறைய பேர் இந்த விஷயத்தைப் பின்பற்றுவதைப் பார்க்கலாம். குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான பொருள்களை பெரியவர்கள் உபயோகிப்பது சரியான விஷயமே இல்லை.
குழந்தைகளுக்கான சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு பொருட்களின் தயாரிப்பே முற்றிலும் வித்தியாசமானது. குழந்தைகளின் சருமம் மற்றும் கூந்தலின் தன்மை, அவர்களது சருமம் சுரக்கும் எண்ணெய்ப்பசையின் தன்மை என பல விஷயங்களைக் கருத்தில்கொண்டே அவர்களுக்கான பொருட்கள் தயாரிக்கப்படும்.
மிக முக்கியமாக, குழந்தைகளுக்கான பொருட்கள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்காதவையாக இருக்கும்படியும் பார்த்தே தயாரிக்கப்படும். அப்படிப்பட்ட பொருட்கள் பெரியவர்களின் சருமத்துக்கும் கூந்தலுக்கும் போதுமானவையாக இருக்காது.
குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருக்கும். பெரியவர்களைப் போல அவர்களுக்கு அதீத சுத்தப்படுத்துதல் தேவைப்படாது. சுற்றுப்புற சூழல் மாசு தாக்கும் வாய்ப்புகளும் அவர்களுக்கு குறைவு.
ஆனால், பெரியவர்களுக்கு சற்றே அதிகமான கிளென்சிங் தன்மை கொண்ட பொருட்கள் தேவைப்படும். அவை சற்று ஸ்ட்ராங்காக இருக்கலாம்.
உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கான ஷாம்பூவை (Baby Shampoo) எடுத்துக்கொள்வோம்… கண்ணீரை வரவழைக்காமலிருக்க அதில் பிஹெச் அளவானது சற்று குறைவாகவே இருக்கும். அதனால் முடியானது சற்று வறட்சியாக மாறலாம். பெரியவர்கள் பேபி ஷாம்பூவை உபயோகித்துக் குளித்த பிறகு கூந்தல் வறண்டு போய்விடுவதை கவனிக்கலாம். அதற்கு இதுதான் காரணம்.
எனவே, குழந்தைகளுக்கான தயாரிப்புகள் மைல்டானவை என்றாலும் அவை பெரியவர்களுக்குப் பொருத்தமானவை என நினைத்து உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : சுங்கச் சாவடி கட்டண உயர்வு முதல் மழை அப்டேட் வரை!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!