பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி முகம் கழுவும் பழக்கம் உடையவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!

Published On:

| By Selvam

சிலருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அல்லது அடிக்கடி முகத்தை அலம்புவது பழக்கமாக இருக்கும். இப்படி அடிக்கடி முகம் கழுவிக்கொண்டே இருக்கும்போது முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் வறட்சியாகத் தொடங்கும். இதனால் முகத்தில் எரிச்சலுணர்வு (Irritation) ஏற்படலாம்.

மேலும், நம் வியர்வை சுரப்பிகள் அடைபட்டு வியர்வை வெளியேற முடியாமல் போவதால் முகத்தில் பருக்கள் தோன்றலாம். மேலும் சருமம் வறண்டு, பாக்டீரியாக்கள் எளிதாகப் படிவதற்கு வாய்ப்பாக அமையும். இதனால் முகத்தில் சிறிய சிறிய கட்டிகள், கொப்புளங்கள் போன்றவை தோன்றலாம்.

புத்துணர்வாக உணர்வதற்கு வேண்டுமானால் வெறும் நீரால் முகத்தைக் கழுவலாம். அதிக சூடாகவும் அதிக குளிர்ச்சியாகவும் இல்லாமல், சாதாரண அறை வெப்ப நிலையில் இருக்கும் தண்ணீரில் முகம் கழுவுவது நல்லது.

முகம் கழுவி முடித்ததும் நாம் பயன்படுத்தும் துண்டு, டிஷ்யூ எதுவாக இருந்தாலும் மென்மையாக இருக்க வேண்டும். கரடுமுரடாக இருக்கும் துணியைப் பயன்படுத்தக்கூடாது. முகத்திலிருக்கும் ஈரத்தை துணியால் ஒற்றி எடுக்க வேண்டுமே தவிர, மேலும் கீழுமாக துணியை வைத்துத் தேய்க்கக் கூடாது.

அதேபோல முகத்தைத் துடைப்பதற்குப் பயன்படுத்தும் துண்டு, கைக்குட்டை போன்றவை சுத்தமாக, தூய்மையாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தியவற்றை, அழுக்கானதைப் பயன்படுத்துவதால்கூட நோய்த்தொற்று ஏற்படலாம்.

அதிக சென்சிட்டிவ் மற்றும் அதிக வறட்சியான சருமம் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை முகத்தைக் கழுவினாலே போதுமானது. மாசு, மேக்கப் பொருள்கள், அழுக்கு என அனைத்தும் முகத்தில் படிந்து காணப்படும் என்பதால் மாலை அல்லது இரவு நேரத்தில் கழுவினால் நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது” : கர்நாடக அரசுக்கு எடப்பாடி கண்டனம்!

’நல்ல வேள அது நடக்கல’ : அப்டேட் குமாரு

ஹெல்த் டிப்ஸ்: உடல் வெளிறியிருந்தால் ரத்தச்சோகையா?!

பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கேற்ற உடற்பயிற்சி எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share