தோற்றம் பாதிக்கப்படும் என்று கண்ணாடி அணிந்திருக்கும் இளவயதினர் அழகுக்காக செல்ஃபி எடுக்கும்போதோ, பார்ட்டி, விசேஷம் போன்றவற்றின்போதோ கண்ணாடியைக் கழற்றி வைத்து விடுவதுண்டு. பவர் கிளாஸ் அணிந்திருக்கும் குழந்தைகள்கூட அவ்வப்போது அதைக் கழற்றி வைத்துவிடுவதுண்டு. இப்படி அடிக்கடி பவர் கிளாஸை கழற்றினால் கண்களின் பவர் ஏறி விடுமோ என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இதற்கு கண் மருத்துவர்கள் சொல்லும் விளக்கம் இதோ…
“பவர் கிளாஸை அவ்வப்போது கழற்றி வைப்பது சம்பந்தப்பட்ட நபருக்கு சற்று ஆசுவாசமாக இருக்கலாம். அதனால் பிரச்சினை எதுவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், பவர் கிளாஸை தொடர்ந்து போட்டால் மட்டும்தான் குறிப்பிட்ட அந்தப் பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற சிங்கிள் ரூலை எல்லோருக்கும் பொதுவாக எடுத்துக்கொள்ள முடியாது.
கண்ணாடி விஷயத்தைப் பொறுத்தவரையில், கண்களில் இருக்கும் பிரச்சினையின் தன்மை, பவர் எந்த அளவுக்கு உள்ளது போன்றவற்றுக்கு ஏற்ப அவரவரின் கண் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, அதிகமான பவர் உள்ளவர்கள் கண்ணாடியை சிறிது நேரம் கூட கழற்றாமல் தொடர்ந்து போட்டுக்கொண்டால்தான் பெட்டராக இருக்கும் என்று கண் மருத்துவர் பரிந்துரைத்தால், அவரது ஆலோசனையைக் கேட்டு நடக்க வேண்டும்.
மற்றபடி, அவ்வப்போது கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் பிறகு எடுத்துப் போட்டுக் கொள்வதால் கண்களின் பவர் ஏறி விடாது. அதே நேரம், சில நிமிட ஆசுவாசத்துக்காக அல்லாமல் சோம்பேறித்தனம், தோற்றம் பாதிக்கப்படும் போன்ற காரணங்களால் தொடர்ந்து கண்ணாடியை தவிர்ப்பது தவறு” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அயலகத் தமிழர் தின விழாவில் ஸ்டாலின் முதல் INDvsENG டி20 டிக்கெட் விற்பனை வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… எல்லாருக்கும் ஏற்றதா ஆஃப் பாயில்?
ஸ்டாலினுக்கு எதிராக எம்.ஜி.ஆரை கையிலெடுத்த விஜய்… எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!
புஸ்ஸி ஆனந்த் – ஜான் ஆரோக்கியசாமி… வெடித்த மோதல்- விஜய் பஞ்சாயத்து!