ADVERTISEMENT

பிரிந்த காதல் மீண்டும் சேருமா? விட்டுச் சென்ற காதல் மீண்டும் வந்தால்??? – ட்ரெண்டாகும் ‘Circular Relationship’!

Published On:

| By Santhosh Raj Saravanan

circular relationship analysis

காதல் பிரிவு (Breakup) வலி நிறைந்தது. ஆனால், பிரிந்து சென்ற அதே நபர் மீண்டும் உங்கள் வாழ்க்கைக்குள் வந்தால்? “பழைய காதலி/காதலன் மீண்டும் வரலாமா?” என்ற கேள்விக்கு விடையாக, இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் புது கான்செப்ட் தான் “Circular Relationship”.

எது Circular Relationship? ஒரு ஜோடி காதலித்து, பின் ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பிரிந்து, சில காலம் இடைவெளி விட்டு மீண்டும் ஒன்று சேர்வதையே ‘சர்குலர் ரிலேஷன்ஷிப்‘ என்கிறார்கள். அதாவது, ஒரு வட்டத்தைப் போல ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து சேர்வது.

ADVERTISEMENT

ஏன் மீண்டும் எக்ஸ் (Ex) பக்கம் சாய்கிறார்கள்? பலரும் புதிய உறவைத் தேடுவதை விட, முன்னாள் உறவிடமே திரும்பச் செல்ல முக்கிய காரணம் ‘Emotional Familiarity’ (பழகிய நெருக்கம்) தான்.
அது என்ன ‘Emotional Familiarity’? இதை சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், புதிதாக ஒரு உறவுக்குள் செல்லும்போது, நம்மைப் பற்றி ‘அ’வன்னாவில் இருந்து பாடம் எடுக்க வேண்டும். நமக்கு என்ன பிடிக்கும், நம் கோபத்தின் அர்த்தம் என்ன என்பதெல்லாம் அந்தப் புதியவருக்குப் புரிய நாட்கள் ஆகும். ஆனால், முன்னாள் காதலருக்கு இது அத்துப்படி.

• கம்ஃபோர்ட் ஜோன் (Comfort Zone): உங்கள் மௌனத்தின் அர்த்தம் கூட உங்கள் எக்ஸுக்குத் தெரியும். அந்தப் புரிதல் தரும் பாதுகாப்பு உணர்வு (Safety), புதியவர்களிடம் உடனடியாகக் கிடைக்காது.

ADVERTISEMENT

• ஈஸி கனெக்ட் (Easy Connect): ஏற்கனவே ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகி இருப்பதால், எந்தவித தயக்கமும் இல்லாமல் (No Filters) இயல்பாக இருக்க முடியும். இந்த ‘பரிச்சயமான உணர்வு’தான் மீண்டும் அவர்களைத் தேடிப் போக வைக்கிறது.

உண்மையான புரிதலும், பொருத்தமும் (Compatibility) இருக்கும் பட்சத்தில், இந்த “செகண்ட் இன்னிங்ஸ்” பலருக்கு ஒர்க்-அவுட் ஆகிறது.

ADVERTISEMENT

வெற்றி பெறுவது எப்படி? பழைய உறவை மீண்டும் புதுப்பிப்பது சுலபம் அல்ல. அது மீண்டும் ஒரு தோல்வியில் முடியாமல் இருக்க நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ் இதோ:

  1. சுய பரிசோதனை (Reflect): பிரிவுக்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். அந்தப் பழைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவா? அல்லது இருவரும் பக்குவப்பட்டு (Mature) இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்யுங்கள்.
  2. அவசரம் வேண்டாம் (Move Slowly): எடுத்தவுடனேயே பழைய நெருக்கத்தைக் காட்டாமல், மெதுவாக உறவை வளர்க்க வேண்டும்.
  3. புதிய எல்லைகள் (Boundaries): கடந்த காலத்தில் செய்த தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க, தெளிவான எல்லைகளை வகுத்துக்கொள்வது அவசியம்.
    மொத்தத்தில்… பிரிவு என்பது ஒரு முற்றுப்புள்ளியாக இல்லாமல், ஒரு இடைவேளையாக மாறி, இருவரும் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு திரும்ப வந்தால், இந்த ‘Circular Relationship’ நிச்சயம் ஒரு அழகான ஆரம்பமாக இருக்கும். மாறாக, அதே பழைய சண்டைகளுடன் திரும்பினால்… அது அதே பழைய கதைதான்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share