ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் குளிக்க தயங்குபவரா நீங்கள்? 

Published On:

| By Kavi

குளிர்காலத்தில் அதிகாலை பொழுதில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையும், குளிர்ந்த நீரும் உடலையும், உள்ளத்தையும் சோம்பல்படுத்தும். அதனால் சிலர் குளிப்பதற்கு தயங்குவார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் வழக்கத்தை மாற்றி ஓரிரு நாட்கள் குளியலுக்கு ஓய்வு கொடுத்துவிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி குளிர்காலத்தில் குளியலைத் தவிர்ப்பது நல்லதல்ல என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள். 

தனிப்பட்ட முறையில் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கு தவறாமல் குளிப்பது முக்கியமானது. கோடைக்காலத்தை ஒப்பிடும்போது குளிர்காலத்தில் அதிகமாக வியர்க்காமல்  இருக்கலாம். ஆனாலும் உடல் தொடர்ச்சியாக எண்ணெயை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.

ADVERTISEMENT

இறந்த சரும செல்களை உடலில் இருந்து அப்புறப்படுத்தும் செயல்முறையும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். வழக்கமாக குளிக்கும் செயல்முறையைத் தொடர்வது இந்த அசுத்தங்களை நீக்க உதவும். உடல் துர்நாற்றம், சருமத் தொற்றுகள் உள்ளிட்ட சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை குறைக்க உதவும். 

பொதுவாக குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடையும், சரும எரிச்சலும் ஏற்படும். குளியல் மூலம் உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது இந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த துணைபுரியும்.

ADVERTISEMENT

வழக்கமான நீரில் குளிக்காமல், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான வெந்நீரில் குளிப்பது நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கவும் உதவும். அந்த நீரில் கலந்திருக்கும் மிதமான வெப்பம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

அது உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு செல்களை துரிதமாக கொண்டு செல்ல உதவிடும். சளி, காய்ச்சல் போன்ற குளிர்கால நோய்களை உடல் திறம்பட எதிர்த்து போராடவும் உதவும்.

ADVERTISEMENT

அத்துடன் மிதமான வெந்நீர் குளியல் மூக்கடைப்பை தடுக்கவும், நாசி துவாரங்களை  திறக்கவும் வழிவகை செய்யும்.

குளியல் போடுவதும் மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையதுதான். குறைவான சூரிய வெளிச்சம் மற்றும் பருவகால நோய்த்தொற்றுகள் காரணமாக குளிர்காலம் மன ஆரோக்கியத்துக்கு சவாலாக இருக்கும்.

இதை எதிர்த்து போராட குளியல் பயனுள்ளதாக அமையும். இந்த குளியல் உடலை தளர்வடையச் செய்து உடல் ஓய்வுக்கு வித்திடும்.  

மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல உணர்வுகளைக் கொண்ட ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டி மன நிலையை மேம்படுத்தும். ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்திற்கும் வித்திடும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் தூக்கம் அவசியம். குறிப்பாக குளிர்ந்த கால நிலை மற்றும் அழுத்தங்களில் இருந்து உடல் மீள்வதற்கு தூக்கம் அவசியமானது. அதற்கு குளியல்  போடுவது முக்கியமானது என்று வலியுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநரே இதெல்லாம் நியாயமா? – அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: கதிர் ஆனந்துக்கு க்ளைமாக்ஸ்… தீவிரம் காட்டும் ED

மீண்டும் சூடுபிடித்த கள்ளக்குறிச்சி வழக்கு… நீதிமன்றம் சரமாரி!

ஆளுநர் புறக்கணிக்கவில்லை… திட்டமிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் : எடப்பாடி பழனிசாமி பேட்டி!

இந்தியாவுக்குள் நுழைந்த அடுத்த கொரோனா… எத்தனை பேருக்கு பாதிப்பு? மவுனம் காக்கும் சீனா

’யார் அந்த சார்’ பேட்ஜுடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share