விளையாட்டு வீரர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்களின் சிகிச்சையாக இருந்த ஐஸ் பாத் இப்போது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலும் வந்துவிட்டது. இந்தப் புதிய சிகிச்சை முறையின் சாதகங்கள், பாதகங்கள் என்ன?
தண்ணீருக்குள் மூழ்கிக் குளிப்பது போல, ஐஸ் கட்டிகள் நிறைந்த ஒரு தொட்டியில் (Bathtub) குளிப்பதுதான் ஐஸ் பாத் (Ice bath). இந்தக் குளியல் முறையில் தொட்டிக்குள் ஐஸ் கட்டிகள் சிறு சிறு துண்டுகளாகக் கொட்டப்படும். வெளிநாடுகளில் வேறு மாதிரியும் ஐஸ் பாத் செய்கிறார்கள்.
உறைந்திருக்கும் பெரிய பனிமலைக்கு நடுவில் சிறிதாக கிணறு போல வெட்டியும் ஐஸ் பாத் எடுக்கிறார்கள். இதற்கு ‘கோல்டு வாட்டர் இம்மெர்ஷன்’ (Cold water immersion) என்றும் இன்னொரு பெயர் உண்டு. இந்த ஐஸ் பாத்துக்கு நிமிடக் கணக்கும் உண்டு.
வலி மிகுந்த இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் வழக்கம் நம்மிடம் ஏற்கெனவே இருக்கிறது. ஐஸ் ஒத்தடம் கொடுக்கும்போது ரத்த நாளங்கள் சுருங்குவதால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் குறையும். இதனால் வலி, வீக்கம் போன்றவை குறையும். இதே ஃபார்முலாதான் ஐஸ் பாத்திலும் கிடைக்கிறது.
பொதுவாகவே குளிர் என்பது மகிழ்ச்சியான, இதமான உணர்வை மனதிலும் உடலிலும் உண்டாக்கும். மழை பெய்வதற்கு முன்பே அதன் வானிலை மாற்றம் நமக்குள் மாயாஜாலத்தை உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட குளிரையே சிகிச்சையாக்குவதுதான் ஐஸ் பாத்.
ஐஸ் பாத் எடுக்கும்போதும் ஒருவருக்கு எண்டார்பின்கள் (Endorphins) சுரந்து இதமான மனநிலை உண்டாகும். இன்னும் கொஞ்சம் அலர்ட்டாக ஒருவர் மாறுவார். சுறுசுறுப்பு கூடும். உடலின் வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் என்கிற ஹார்மோன் குறையும் என்று சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஐஸ் பாத் எடுத்துக் கொண்டாலே ஒருவருக்கு எல்லா நற்பலன்களும் கிடைத்துவிடும் என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அவையெல்லாம் ஓர் அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்படுபவை. சில ஆய்வுகள் ஆங்காங்கே நடந்துள்ளன. ஆனால், இன்னும் இதுகுறித்து நிறைய ஆராய்ச்சிகள் தேவை. தீர்க்கமான முடிவுகள் தேவை. அப்போதுதான் ஐஸ் பாத் எடுப்பதை ஒரு சிகிச்சையாகவே கருத முடியும்.
இப்போதைக்கு ஐஸ் பாத் ஓர் ஆதரவு சிகிச்சை (Supportive treatment) போல கூடுதல் உதவியையே செய்யும். எனவே, ஐஸ் பாத் எடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. நம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொண்டுதான் ஐஸ் பாத் எடுக்க வேண்டும்.
ஏற்கெனவே நம்மிடம் சுகாதாரக் கட்டமைப்பு என்கிற ஒன்று இருக்கிறது. நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதற்காகவே படித்த மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். பாதுகாப்பான இந்த மருத்துவ முறையைத்தான் மக்கள் நாட வேண்டும். புதிதாக ஒரு விஷயம் பலராலும் பேசப்படுகிறது என்பதற்காக அப்படியே நாமும் அதைப் பின்பற்ற முயற்சி செய்யக் கூடாது” என்று எச்சரிக்கிறார்கள் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை சமைத்த அறிஞர் அண்ணா
டாப் 10 நியூஸ் : ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன் முதல் மூக்குத்தி அம்மன் பட அப்டேட் வரை!
கிச்சன் கீர்த்தனா : பிரெட் மஞ்சூரியன்
இன்று மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
எப்படி தான் டிசைன் டிசைனா யோசிப்பாங்களோ? – அப்டேட் குமாரு