அரசு ஊழியர்களுக்கான மார்ச் மாத சம்பளத்தை ஏப்ரல் 2ஆம் தேதி வழங்குமாறு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். is govt employess march salary delayed
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களின் சம்பளம், அந்த மாதத்தின் இறுதி நாளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நாள் விடுமுறை நாளாக வரும் பட்சத்தில், அதற்கு முந்தைய நாளில் சம்பளம் வழங்கப்படும்.
இந்த நிலையில் தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள அரசாணையில் சம்பளம் தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில், “ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் படி, மார்ச் 2025 மாதத்துடன் தொடர்புடைய அனைத்து சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகை அனைத்தையும் அரசு ஊழியர்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி விடுவிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.