‘உங்களுக்கு புரதச்சத்து குறைவாக இருக்கிறது… புரோட்ட்டீன் பார் சாப்பிடுங்கள்’ என்று யாராவது சொன்னதால் போதும். உடனே தினமும் ‘புரோட்டீன் பார்’ சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கிக் கொள்வார்கள். இப்படி புரதத்தேவைக்காக ‘புரோட்டீன் பார்’ சாப்பிடுவது ஆரோக்கியமானதா? பொதுநல மருத்துவர்களின் விளக்கம் என்ன?
“நம்முடைய ஒருநாள் உணவில் 25 சதவிகித அளவு புரதச்சத்து இருந்தால், அதை ‘ஹை-புரோட்டீன் உணவு’ (High Protein Foods) என்று சொல்கிறோம்.
சைவம், அசைவம் என இரண்டிலும் புரதச்சத்துள்ள உணவுகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொண்டு போதுமான அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
அப்படி உணவின் மூலம் போதுமான புரதச்சத்து கிடைக்கப் பெறாதவர்கள், புரதச்சத்து தேவைக்காக புரோட்டீன் டிரிங்க்காக எடுத்துக்கொள்ளலாம். இன்னும் சிலர் புரோட்டீன் பாராக எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே நல்லதுதான்.
தினமும் ஒரு புரோட்டீன் பார் எடுத்துக்கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால், அந்த புரோட்டீன் பாரை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவை.
பெரும்பாலான புரோட்டீன் பார்களில் சுவைக்காக அதிகப்படியான சர்க்கரையும் செயற்கை இனிப்புகளும் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. இதனால் உங்கள் உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். வேறு சில உடல் உபாதைகளையும் ஏற்படுத்தும்.
தவிர, புரோட்டீன் பார் தயாரிக்க வெண்ணெய், வெஜிடபிள் ஆயில் போன்றவற்றையும் சேர்ப்பார்கள். இதனால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். அதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
எனவே, புரோட்டீன் பார் எடுத்துக்கொள்ள விரும்புவோர், அதை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதச்சத்து, தாவரங்களில் இருந்து பெறப்படும் புரதச்சத்து என இருவகை புரதங்கள் உள்ளன. சோயா, பட்டாணி போன்றவற்றில் இருந்து பெறப்படுவது தாவர புரதம் பிரிவில் வரும். கேசின் (Casein ), வே புரோட்டீன் (Whey protein) போன்றவை விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதச்சத்தில் வரும்.
இவற்றில் உங்களுக்கு எது தேவையோ, அத்துடன் நட்ஸ் சேர்த்து வீட்டிலேயே புரோட்டீன் பார் செய்து சாப்பிடலாம். கடைகளில் வாங்குவதென்றால் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களை கவனித்து ஆரோக்கியமானதாகத் தேர்ந்தெடுக்கவும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’வினேஷ் போகத் மனு தள்ளுபடி’ : இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிர்ச்சி தகவல்!
நீதிபதி ஓகா போட்ட கிடுக்கிப்பிடி.., சிக்கித் திணறும் ED… செந்தில்பாலாஜிக்கு ஜாக்பாட்!
GOAT Trailer : இன்றும் கைவிரித்த அர்ச்சனா… விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!