பஹல்காம் தாக்குதல் : பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?

Published On:

| By Kavi

is cake cutting ceremony at the Pakistani embassy

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொந்தளிப்பிலும், சோகத்திலும் மூழ்கியிருக்கும் நிலையில் டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் ஒருவர் கேக் எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. is cake cutting ceremony at the Pakistani embassy

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தற்போது வரை 29 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பான லக்‌ஷர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிடெண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இந்தசூழலில் நேற்று (ஏப்ரல் 23) பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி வாகா எல்லை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு போடப்பட்ட பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு, அங்கிருந்து அதிகாரிகள் வெளியேற உத்தரவிடப்பட்டனர். தூதரகத்தின் வெளியே இருந்த பேரிகார்டுகளை எல்லாம் போலீசார் எடுத்துவிட்டனர்.

ADVERTISEMENT

பிரதமர் மோடி குற்றம் செய்தவர்களை தப்பவிடமாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில், டெல்லி பாகிஸ்தான் தூதரகத்துக்குள் ஒருவர் கேக் எடுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது அவரை சூழந்த பத்திரிகையாளர்கள், எதற்காக இந்த கேக்கை எடுத்துச் செல்கிறீர்கள். பதற்றமான சூழல் நிலவும் போது உங்கள் அலுவலகத்துக்குள் கேக் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அந்த அதிகாரி எந்த தகவலையும் சொல்லாமல் கேக்கை உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்.

ADVERTISEMENT

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு எக்ஸ் பயனர், “நாடு முழுவதும் பதற்றமான சூழல். இந்த நேரத்தில் கொண்டாட்டம் எதற்கு? வெட்ககேடான காட்சி” என்று கூறியுள்ளார். is cake cutting ceremony at the Pakistani embassy

மற்றொருவர், டெல்லியில் ப்ளாட் வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். பாகிஸ்தான் தூதரகத்தை வாடகைக்கு எடுக்கவோ அல்லது விலைக்கு வாங்கவோ முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. is cake cutting ceremony at the Pakistani embassy

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share