பியூட்டி டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா பாடிவாஷ்?

Published On:

| By christopher

Is body wash suitable for everyone?

இப்போதெல்லாம் சிலருக்கு சோப்பை தவிர்த்து பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் சருமநல மருத்துவர்கள். காரணம், பாடிவாஷில் உள்ள பி.ஹெச் அளவைவிட, சோப்பில் உள்ள பி.ஹெச் அளவு அதிகம் என்கிறார்கள்.

பி.ஹெச் அளவு என்பது ஒரு பொருளின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையைக் குறிக்கும் அளவீடு. இந்த அளவீடு சோப்பில் அதிகம். அது சிலரது சருமத்துக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை, அதிதீவிர ரசாயனங்கள் கலந்த சோப் நீக்கிவிடும். அதுபோல, இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயும் சோப் பயன்படுத்துவதால் நீங்கிவிடும். இதனால் சருமம் வறட்சியாகிவிடும்.

ஆனால், பாடிவாஷிலோ, பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும். சருமத்தைப் பெரிதாக பாதிக்காது; ஈரப்பதத்தை நீக்காது; சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க பாடிவாஷ் உதவும்.

எனவே, எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், பாடிவாஷ் பயன்படுத்துவதே நல்லது என சருமநல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். Is body wash suitable for everyone?

இந்த நிலையில், எல்லாருக்கும் ஏற்றதா பாடிவாஷ்? என்கிற கேள்விக்கு விளக்கமளிக்கிறார்கள்.

பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாடிவாஷ் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாடிவாஷை கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்துக் குளிக்கலாம். சில பாடிவாஷ்களில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு; சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் பாடிவாஷ், வாசனை குறைவான பாடிவாஷ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். உலர் சருமப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதே சமயம் வாசனை இல்லாத பாடிவாஷாகவும் இருக்க வேண்டும். Is body wash suitable for everyone?

0-6 வயதுள்ள குழந்தைகளுக்கென பிரத்யேகமாக நறுமணம் சேர்க்காத பாடிவாஷ் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தலாம். தேங்காய்ப்பால், பட்டர், ஆலிவ், கற்றாழை போன்றவை கலந்த பாடிவாஷ் சிறந்தவை.

“சருமம்… எண்ணெய் பசையானது, வறண்டது, இரண்டும் கலந்தது (காம்பினேஷன்), நார்மலானது என நான்கு வகைப்படும். முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை இருப்போர், எண்ணெய்ப் பசை நீக்கும் ஃபேஸ் வாஷ் மற்றும் உடலுக்கு பாடிவாஷ் பயன்படுத்தலாம்.

வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அவர்களது சருமத்துக்கேற்ற ஃபேஸ்வாஷ் அல்லது பாடிவாஷையேகூட முகத்துக்கும் பயன்படுத்தலாம்.

நார்மல் சருமம் கொண்டவர்கள், பாடிவாஷ் மட்டும் பயன்படுத்தினாலே போதும். விருப்பப்பட்டால் மட்டும், முகத்துக்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துங்கள்” என்று பரிந்துரைக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share