’அயலான்’ இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?

Published On:

| By christopher

Is 'Ayalaan' a copy of this Hollywood film paul?

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அயலான். VFX- ல் உருவாக்கப்பட்ட ஒரு ஏலியன் கதாபாத்திரம் இந்த படம் முழுக்க இடம்பெற்றுள்ளது. அந்த ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்தது. பூமிக்கு வரும் ஏலியன் சிவகார்த்திகேயனின் உதவியுடன் தனது மிஷனை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறது என்பதே இந்த படத்தின் ஒன் லைன் கதை. வரும் ஜனவரி 12 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், அயலான் படம் ஹாலிவுட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பால் (Paul) என்ற திரைப்படத்தின் காப்பி என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். பால் (Paul) படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்தின் உருவத்தை போலவே அயலான் படத்தின் ஏலியன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

தற்போது அயலான் மற்றும் பால் (paul) ஆகிய இரண்டு படங்களின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அயலான் படம் 2011 ஆம் ஆண்டு வெளியான பால் (Paul) படத்தின் காப்பியா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

’முதன்முறையாக 8 மாதத்தில் உருவான தொழிற்சாலை’: ஓலா எலக்ட்ரிக் சிஇஓ பெருமிதம்!

பணமழையில் சந்தானம்!

TNGIM2024 : எந்தெந்த நிறுவனம்? எவ்வளவு முதலீடு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share