இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் மத்திய அரசு பொது மக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. is atms closed across india
பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பஞ்சாப், சண்டிகர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பிளாக் அவுட் செய்யப்பட்டது.
இந்தசூழலில் இணையத்தில் இந்தியா பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர்களுக்கு இறுதி சடங்கு, நடத்தப்பட்ட பிறகு பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ பரவியது. ஆனால் அது ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னாள், மே 6 ஆம் தேதி இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது என மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பட்டல் செக்டாரில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி, குறைந்தது 12 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ பரவியது. ஆனால் அது 2011ல் எடுக்கப்பட்டவையாகும்.

பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்தியாவின் எஸ்.400 ஏவுகணைகள் அழித்து வரும் நிலையில், இந்த எஸ்.400ஐ பாகிஸ்தான் அழித்துவிட்டதாக ஒரு செய்தியும் வீடியோவும் பரவியது. ஆனால் அந்த வீடியோ மாஸ்கோவில் உள்ள ராணுவ தளத்தில் 2023ல் எடுக்கப்பட்டவையாகும்.

அதேபோன்று பாகிஸ்தானில் உள்ள நீலம்-ஜீலம் நீர்மின் திட்டத்தை இந்தியா குறிவைத்ததாக சமூக ஊடகப் பதிவுகள் கூறின. வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அப்படி எந்த தாக்குதலையும் இந்தியா நடத்தவில்லை. பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே குறிவைத்து தாக்கியது என்று விளக்கமளித்தார்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் வி.கே. நாராயண், ராணுவத் தயார்நிலை குறித்து வடக்குப்படை அதிகாரிக்கு ரகசியக் கடிதம் அனுப்பியதாக ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுவும் உண்மையில்லை என்று மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கூறியுள்ளது.

ராஜோரி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள ஒரு ராணுவப் படைப்பிரிவின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் அப்படி எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அதுபோன்று நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அதுபோன்று எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனினும் பதற்றமான பகுதிகளாக இருக்கும் ஜம்மு, அம்ரிஸ்டார், லூதியானா என 24 விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள ஹசிரா துறைமுகம் தாக்கப்பட்டதாகவும் ஒரு வீடியோ பரவியது. ஆனால் இந்த காணொளி ஜூலை 7, 2021 தேதியிட்டது..

மல்டிபிள் லாஞ்ச் ராக்கெட் சிஸ்டம்ஸ் அடிப்படையில் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ பயங்கர நெருப்புடனும் வெடிசத்தங்களுடன் பரவியது. இதில் உண்மை என்னவென்றால், இது ஒரு ஆன்லைன் கேமிற்காக உருவாக்கப்பட்ட வீடியோ. சுமார் மூன்று ஆண்டுகளாக இணையத்தில் உள்ளது.

முசாபராபாத்தில் ஒரு சுகோய் Su-30MKI ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் ஒரு இந்திய விமானி உயிருடன் பிடிபட்டதாகவும் பாகிஸ்தான் சமூக ஊடகக் கணக்குகள் கூறுகின்றன. ஆனால், இந்திய விமானப்படையின் இந்த சுகோய் SU-30MKI ரக விமானம், மகாராஷ்டிராவின் புனே-அகமது நகர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள குல்வாடி கிராமத்தின் உண்ட்ரே வஸ்தியில் அக்டோபர் 14, 2014 அன்று விபத்துக்குள்ளானதாகும்.

அதுபோன்றுதான் தற்போது போர் பதற்றத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்தசூழலில் இந்த செய்தி உண்மையில்லை என்றும் நாடு முழுவதும் ஏடிஎம்கள் 3 நாட்களுக்கு மூடப்படும் என வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் முற்றிலும் போலியானது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. is atms closed across india
ஏடிஎம்-களும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளன.
போர் பதற்றம் சூழ்ந்திருக்கும் வேளையில் இதுபோன்ற போலி செய்திகளையும் வீடியோக்களையும் பரப்பி மக்களை பீதியடைய செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. is atms closed across india