தற்போது முடி உதிர்வு என்பது இளைஞர்களிடையே காணக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி உதிர்வதற்கும், மீண்டும் வளருவதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆனால் சிலர், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தவும், புதிய முடி வளரவும் ஹேர் ஆயில் பயன்படுத்தும் பழக்கத்தைப் பின்பற்றுகின்றனர்.
நாம் உண்ணும் தவறான உணவு உட்பட பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். இது தவிர காற்று மாசுபாடு, மன அழுத்தம், தைராய்டு, ஹார்மோன் மாறுபாடு மற்றும் சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என அனைத்தும் முடி உதிர்தல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
ஆனால், முடிக்கு தினமும் ஹேர் ஆயில் பயன்படுத்துவதன் மூலமாக அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என நினைக்கிறோம்.
இந்த நிலையில், கூந்தலை பராமரிப்பதற்காக வாரந்தோறும் தவறாமல் எண்ணெய் குளியல் செய்பவர்களும் உண்டு. தலைக்கு எண்ணெய் தடவினால் முடி நன்றாக வளரும் என்பது முழுமையான உண்மையல்ல.
இருப்பினும், தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
முடி வளர்ச்சிக்கு ஹேர் ஆயில் தேவையில்லை என்றாலும், கூந்தலை வறட்சி இல்லாமல் பராமரிக்க இது முக்கியமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இத்தருணத்தில் நம் அனைவருக்கும் எழும் ஒரு கேள்வி, யாரெல்லாம் முடிக்கு எண்ணெய் பயன்படுத்தலாம்… பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.
தலையில் எண்ணெய் தடவுவதால் உச்சந்தலை வறண்டு போகாமல் இருக்கும். பொதுவாக தினசரி எண்ணெய் தேய்ப்பது அவசியமில்லை என்பதே நிபுணர்களின் கருத்து.
“சிலருக்கு இயற்கையாகவே தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெய் வெளியாகும். இந்த பிரச்சினை இருப்பவர்கள் தலைக்கு தினந்தோறும் எண்ணெய் தேய்க்கக்கூடாது. அதேபோல் பொடுகு பிரச்சினை இருப்பவர்களும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது. ஏனெனில் எண்ணெய் காரணமாக பொடுகுத் துகள்கள் உச்சந்தலையிலும் முடியிலும் ஒட்டிக்கொள்கின்றன.
எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில், பொடுகு குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கலாம். எண்ணெய், இறந்த சரும செல்கள் சேர்ந்து, உச்சந்தலையில் அழுக்கு மற்றும் அரிப்பு ஏற்படுத்தும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆயில் மசாஜ் செய்து தலைக்கு குளிப்பது நல்லது.
தோல் மருந்துவர் பரிந்துரைக்கும் ஷாம்பூ மற்றும் கன்டிஷனர்கள் அல்லது இயற்கையான மூலிகை பொருட்களை பயன்படுத்துவது கூடுதல் பலனளிக்கக்கூடும்” என்கிறார்கள் கூந்தல்நல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணே எனக்கு ஒரு டவுட்டு! – அப்டேட் குமாரு
’அழுகைய அடக்கவே முடியல..!’ – ’அமரன்’ குறித்து நடிகர் ரஜினிகாந்த்
நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகள் : மோடிக்கு கார்கே பதிலடி!
பியூட்டி டிப்ஸ்: பொடுகுத் தொல்லையைப் போக்க… இதோ ஒரு சூப்பர் ஹேர் பேக்!