ஹேர் டை உபயோகிப்பது என்பது இன்று எல்லா தரப்பு மக்களிடமும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஆனால், அதை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் படித்தவர்களுக்குக்கூட விழிப்புணர்வு இல்லை.
அமோனியா ஃப்ரீ (Ammonia Free) ஹேர் டை பாதுகாப்பானது என்பது பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதே அளவு பிபிடி ஃப்ரீ (PPD Free) ஹேர் டையாக இருக்க வேண்டியதும் முக்கியமானது.
பாராபினலைன்டயாமின் (Paraphenylenediamine) என்பதன் சுருக்கமே பிபிடி (PPD). ரோடுகளில் போடப்படும் தார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மலிவான கெமிக்கல் அது.
பிபிடி என்ற கெமிக்கலை ஹேர் டையில் சேர்க்கும்போது அதன் கறுப்பு நிறம் கூந்தலில் நன்கு ஒட்டிக்கொள்ளும். அதற்காகவே அதைப் பிரதானமாகச் சேர்க்கிறார்கள். அதை அடிக்கடியும் அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தும்போது புற்றுநோய் வருவதற்குக்கூட வாய்ப்புகள் உண்டு.
டை உபயோகிப்பதால் ஏற்படும் அலர்ஜி மிகவும் சகஜமானது. சாதாரண அரிப்பில் ஆரம்பிக்கும். தலையில் கடுமையான எரிச்சலை உணர்வார்கள். ஆனாலும், அப்படித்தான் இருக்கும் என அதைப் பொறுத்துக் கொள்ளப் பழகிவிடுவார்கள்.
எனவே, பிபிடி இல்லாத ஹேர் டையாக பார்த்து வாங்கிப் பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம். மெடிக்கல் கிரேடு ஹேர் டை கிடைக்கிறது. மருத்துவரிடம் கேட்டு அதைப் பயன்படுத்தலாம்.
“ஹேர் டை பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டியது மிக முக்கியம். கெமிக்கல் டைதானே பிரச்சினைக்குரியது என்று பிளாக் ஹென்னா பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் அதை உபயோகிப்பவர்களும் இருக்கிறார்கள்.
பிளாக் ஹென்னாவில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் பயன்படுத்தப்படுவதால்தான் ஆரஞ்சு நிறம் கிடைக்கிறது. அதுவும் ஆபத்தானதுதான்.
மருதாணி பவுடராக வாங்கிப் பயன்படுத்துவதிலும் பக்க விளைவுகள் இருக்கும். டை உபயோகிக்கும்போது முகத்தில் கருமை வருகிறது என்றால் அதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது.
இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்வதோடு, டை உபயோகிக்கும் கால இடைவெளியையும் மாதம் ஒரு முறை என குறைத்துக்கொள்வது பாதுகாப்பானது” என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : தேசிய விண்வெளி தினம் முதல் கொட்டுக்காளி, வாழை ரிலீஸ் வரை!
ஹெல்த் டிப்ஸ்: வெளியே கிளம்பும்போது வயிற்றைப் புரட்டுகிறதா… காரணம் இதுதான்!