அதிமுக கூட்டணிக்காக இதுவரை தவம் கிடந்தது கிடையாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Is AIADMK doing penance for an alliance
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜகவை நோட்டா கட்சி, தீண்டதகாத கட்சி, பாஜகவுடன் கூட்டணியிலிருந்ததால் தான் தோற்றோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தவம் கிடக்கிறார்கள்” என்று அதிமுகவை மறைமுகமாக கூறியிருந்தார்.
இந்தநிலையில் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கப்பட்டது முதல் யாருடனும் கூட்டணி வைக்க இதுவரை தவம் கிடந்தது என சரித்திரமே கிடையாது. பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது” என்று கூறியுள்ளார். நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிமுக யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை. அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Is AIADMK doing penance for an alliance