மதிய நேரத்தில் தூங்குவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

Published On:

| By Santhosh Raj Saravanan

is afternoon sleeping good or bad for health

மதிய நேரத்தில் தூங்குவதில் (Afternoon Sleeping) நன்மை உள்ளதா அல்லது தீமை உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தூக்கம் என்பது நமது உடலுக்கும் மனதுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒருநாள் சரியாக தூக்கம் இல்லை என்றாலும் கூட அந்த நாள் சோர்வாகவும், எரிச்சலாகவும் இருக்கும். நல்ல உறக்கம் என்பது அந்த நாள் முழுவதும் நம்மை புத்துணர்வாக இருக்க வைக்கிறது. ஒரு நாளுக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை உறக்கம் அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ADVERTISEMENT

தூக்கமின்மைப் பிரச்சனை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனிடையே மக்கள் மதிய உணவுக்குப் பிறகான 2-3 மணி வரை சோம்பலாக தங்களை உணர்கிறார்கள். அலுவலகத்தில் பணியாற்றுபவர்களாக இருந்தாலும் கூட அந்த சமயம் மிகவும் மந்தமாகவே அவர்களுக்கும் இருக்கும்.

மதிய தூக்கத்தை விரும்பும்மக்கள் (People like afternoon sleep): மக்கள் மதிய உணவிற்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். அப்படி சற்று நேரம் உறங்கிவிட்டால் அதற்குப் பிறகான அந்த நாள் சுறுசுறுப்பாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், மதிய தூக்கம் ஆரோக்கியமானதா அல்லது தீங்கு விளைவிப்பதா என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது.

ADVERTISEMENT

இரவு தூக்கத்தை பாதிக்கும் மதிய உறக்கம் (Afternoon naps affect nighttime sleep): மதிய நேரத் தூக்கம் என்பது இரவு நேரத் தூக்கத்தின் தரத்தை பாதிப்பதாக சில ஆராய்சிகள் கூறுகின்றன.  ஏனெனில் 60 – 90 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலான தூக்கம் என்பது இரவில் தூங்குவதை தாமதப்படுத்தக்கூடும்.  மதிய நேரம் தூங்கியவர்களுக்கு கொரோனா தொற்று ஆபத்து அதிகம் இருப்பதாக சீனாவில் நடந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதனால் பகல் நேர தூக்கம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறதா அல்லது இரவு நேர தூக்கத்தை பாதிக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன.

மதிய நேரத் தூக்கத்தால் ஏற்படும் நன்மைகள் (Benefits of afternoon sleep): மதிய நேரத் தூக்கத்தால் ஆரோக்கியமான நன்மைகள் இருக்கலாம் என சில அராய்ச்சிகள் கூறுகின்றன. இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்திலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தினமும் மதியம் 20 – 30 நிமிடங்கள் தூக்கம் போடுவது முளைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு குட்டித் தூக்கம் மனநிலை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது. இரவில் போதுமான தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள், மன கவனம் தேவைப்படும் வேலைக்கு மதிய தூக்கம் மிகவும் நன்மை அளிக்கும்.

ADVERTISEMENT

ஒரு குட்டித் தூக்கம் மன அழுத்த ஹார்மோன்களை குறைத்து உடலின் தொற்றுகளை எதிர்த்துப் போராடச் செய்கிறது. 

அதே சமயம் மதிய நேரம் நீண்ட தூக்கத்தை தவிர்த்துவிட வேண்டும். அதே சமயம் ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையைப் பொறுத்து தூக்கம் என்பது மாறுபடும். அதிகமான நேரம் பகலில் உறங்குவது உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே, தனிப்பட்ட உடல்நலனை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் தூக்கத்தின் முறையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share