இருட்டுக்கடையையே வரதட்சணையாக கேட்ட மருமகன் : உரிமையாளர் போலீசில் புகார்!

Published On:

| By Kavi

iruttu kadai halwa owner dowry complaint

திருநெல்வேலி இருட்டுக்கடையை வரதட்சணையாக கொடுக்குமாறு, அந்த குடும்பத்தில் பெண் எடுத்தவர் கேட்டுள்ளார்.  iruttu kadai halwa owner dowry complaint

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோவில் நுழைவாயிலுக்கு எதிரே இருட்டுக்கடை அல்வா கடை அமைந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியளவில்  புகழ்பெற்றது.  கடந்த பிப்ரவரி மாதம் கள ஆய்வுக்காக நெல்லை சென்ற முதல்வர் ஸ்டாலின் இருட்டுக்கடைக்கு சென்று அல்வா வாங்கி சாப்பிட்டார். 

இப்படி புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குடும்பத்தில் பெண் எடுத்தவர், அந்த கடையையே வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 

திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா மகள் கனிஷ்காவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடந்தது.  தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. 

ADVERTISEMENT

அம்பானி இல்ல திருமணம் வீடியோ இணையத்தில் வைரலானது போல தமிழகத்திலும் இருட்டுக்கடை உரிமையாளரின் குடும்ப திருமண வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.  iruttu kadai halwa owner dowry complaint

இந்தநிலையில்  பல்ராம் சிங் வரதட்சனை கேட்பதாக கனிஷ்கா நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ADVERTISEMENT

புகார் அளித்தபின் இன்று (ஏப்ரல் 16) நெல்லையில் தனது தாயாருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் கனிஷ்கா.  iruttu kadai halwa owner dowry complaint

அப்போது அவர் பேசுகையில், “என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது. அவரிடம் என்னை கூட்டிச் சென்று அடிமையாக இருக்க சொல்லி டார்ச்சர் செய்தார். அப்படி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செய்துவிடுவேன் என்று மிரட்டினார்.  விவாகரத்து கேட்டு மிரட்டினார். இல்லையென்றால்  அந்த பெண்ணுடன் நான் லிவிங்கில் தான் இருப்பேன்.  உன் அம்மாவிடம் ரூபாய் வாங்கிட்டு வா என்று சொல்லி அவர்களுடைய வண்டியிலேயே என்னை அனுப்பிவிட்டார்கள்” என்றார். 

கனிஷ்காவின் தாயார் கூறுகையில்,  “என் மகளுக்கு திருமணம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. 41 நாட்கள் கணவர் வீட்டில் இருந்தார். திருமணம் முடிந்த நாளில் இருந்தே வரதட்சணை கேட்டு அவரது குடும்பத்தினர் மிரட்டி வந்துள்ளனர். அந்த பையனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது திருமணத்திற்கு பின்னர்தான் தெரியவந்தது. 

வரதட்சணைக்காக எங்கள் பிஸினசை எழுதி கொடுக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். என் மகளை அப்படி மிரட்டி தாக்கியிருக்கிறார்கள். அடிமை போல் நடத்தியிருக்கிறார்கள். உங்கள் அம்மாவிடம்  எதாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார்கள். 

மாமனாரும், மருமகனும் அவர்களது வண்டியிலேயே அனுப்பியிருக்கிறார்கள். என் மகள் போகமாட்டேன் என்று  சொல்லியிருக்காள். இதனால் விவாகரத்து கேட்டிருக்கின்றனர்.  

இதுகுறித்து அந்த பையனின் அப்பாவிடம் கேட்டால், பொய்யை உண்மையாக சொல்வதும், உண்மையை பொய் என சொல்வதுதான் என் தொழிலே. எனக்கு பாஜக ஆதரவு இருக்கிறது என்கிறார். மத்திய அரசிடமிருந்து ஸ்டேண்டிங் கவுன்சிலில் போஸ்டிங் கொடுத்திருக்கிறார்கள். அதனால் எந்த துறை ஆவணங்களையும் பொய்யாக என்னால் கொடுக்க முடியும். எனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலோ, பிஸினசை எழுதிக் கொடுக்கவில்லை  என்றாலோ என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று மிரட்டினார்.  iruttu kadai halwa owner dowry complaint

எங்கள் பிசினஸை எழுதிக்கொடுக்கவில்லை என்றால் உங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று தாலி கட்டிய அரை மணி நேரத்தில் எங்கள் உறவினர் முன்வைத்து கடுமையாக பேசினார். காசுக்காக என் மகளை கல்யாணம் செய்திருக்கிறார்கள்.

ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பிலான டிபெண்டர் காரை கேட்டார்கள். அதனால் கார் புக் செய்தோம். எனினும் கைக்கு கார் வருவதற்குள் என் பெண்ணை அவ்வளவு கொடுமை செய்திருக்கிறார்கள்.

ஒரு வாஷிங் மிஷினுக்காக மாமனார், மாமியார், கணவர் என அனைவரும் டார்ச்சர் செய்திருக்கிறார்கள். எங்களுக்கு முதல்வரும், போலீசாரும் உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். iruttu kadai halwa owner dowry complaint

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share