இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒரு அதிமுக காரர், ஆர்.பி. உதயகுமார் பேசுன வீடியோவை காட்டி, எடப்பாடி – அமித் ஷா சந்திச்சத.. ‘தமிழ்நாட்டு இரும்பு மனிதரும், இந்தியாவின் இரும்பு மனிதரும் டெல்லியில் சந்திச்சிருக்காங்க’னு சொல்லி சிலாகிச்சிட்டு இருந்தாரு.
அவருகிட்ட, எடப்பாடி இரும்பு மனிதர்னா, எஸ்.பி. வேலுமணி என்ன சில்வர் மனிதரா? கே.பி.முனுசாமி என்ன அலுமினிய மனிதரா? தம்பிதுரை என்ன தங்க மனிதரா?’னு திருப்பிக் கேள்வி கேட்டேன்..
அவரு ஆஃப் ஆயிட்டாரு… இந்த மனிதர்கள் கூட வாழவே வேண்டாம்னு நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… Iron Man Update Kumaru
திருப்பூர் சாரதி Iron Man Update Kumaru
சிலர் பஞ்சாயத்து பண்றேன்னு கூட்டத்துக்குள்ள வாலண்டரியா நுழைஞ்சு, கடைசியில் எல்லார்கிட்டயும் தர்ம அடி வாங்கிட்டு போவாங்க.
இந்தியும் அப்படித்தான் வாங்கும்னு தோனுது!

ச ப் பா ணி
சம்மர் வர்ரதுக்கு முன்னாடியே மார்கெட்ல மாஸ் பண்றோம் பாத்தியல்ல…
அதாம்லே தர்பீஸூ
நெல்லை அண்ணாச்சி
தமிழ்நாட்டின் ” இரும்பு ” மனிதர் எடப்பாடி பழனிசாமி,!
..,.ஆர்.பி.உதயகுமார்
– மறுக்கா…சொல்லுங்க..

balebalu
இரும்பு மனிதர் ன்னு எப்படி சொல்லுறீங்க…
ED ரெய்டு என்னும் காந்தம் வெச்சு…
டெல்லியில் கூட்டணிக்கு இழுத்துட்டாரே…

ச ப் பா ணி
உலகில் அதிகம் காணாமல் போனவர்கள்..
“நான் இருக்கேன் கவலைப்படாதேனு” சொன்னவர்கள் தான்.

ArulrajArun
ஒரே ஆண்டில் 2.16 கோடி பேர் ஓசிப் பயணம் – செய்தி
அப்போ ஒரே ஆண்டில் 2.16 கோடி பேர் ஓசில பயணம் செஞ்சாங்கன்னு சொல்றதுக்குத்தான் ஒரு ரயில்வே துறை அமைச்சர் அதுக்கு கீழ அதிகாரிங்க அதுக்கு கீழ வேலை ஆட்கள் எல்லாம் இருக்காங்க அப்படித்தானே….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்கால தடை.
-அனேகமா விக்ரம் என்னை போல மகர ராசின்னு நினைக்கறேன். வர்ற சனிபெயர்ச்சில இருந்து ஓஹோன்னு வரலாம்னு இருந்தப்போ சனிப்பெயர்ச்சியே தள்ளி போன கதை தான்..

செங்காந்தள்
”இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா” – ஆர்.பி.உதயகுமார்
அப்ப சர்தார் வல்லபாய் பட்டேல்?
அவர் கிடக்கிறார் விடுங்க பாஸ்.

கோழியின் கிறுக்கல்!!
பைக்கை நாம் தான் balance பண்ணனும்,
ஆனா காரை நாம் Balance பண்ண தேவையில்லை!!
அது மாதிரி தான் வாழ்கையில் பிரச்சனைகளும்!!
