ஈரான் மீதான இஸ்ரேலின் ‘பயங்கரவாத’ தாக்குதலுக்கு எதிரான ‘Operation True Promise’ நடவடிக்கை ஓயாது என்று அந்நாட்டு புரட்சிப் படை அறிவித்துள்ளது. Iran’s Islamic Revolutionary Guard Corps warns ‘Operation True Promise’ will continue against Israel
ஈரானின் Islamic Revolutionary Guard Corps வெளியிட்ட அறிக்கை: ஈரானுக்குள் ‘ஜியோனிச’ சித்தாந்த இஸ்ரேல் மிக கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி அப்பாவி பிஞ்சு குழந்தைகளைப் படுகொலை செய்துள்ளது. ஈரான் ராணுவத்தின் மூத்த தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் முக்கியமான விஞ்ஞானிகளும் உயிரிழந்துள்ளனர். அப்பாவி பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் மரணமடைந்துள்ளனர்.
இத்தகைய தாக்குதல்களில் இருந்து ஈரானைப் பாதுகாக்கும் வகையில் பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான ஈரான் புரட்சிப் படையின் Operation “True Promise 3” நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவ நிலைகள், விமானப் படை தளங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும். இவ்வாறு ஈரான் புரட்சிப் படை தெரிவித்துள்ளது.
