பாஸ்கர் செல்வராஜ்
ஆட்சிமாற்றத்துக்கான போரில் அசையாமல் நி(வெ)ன்ற ஈரான்
இதுவரையிலும் மின்சாரம், எண்ணெய், எரிவாயு கொண்டு உற்பத்தி செய்து இணையம் மூலம் இணைத்து இயக்கும் பொருள்கள் என்பதாக உலக உற்பத்தியும் அதற்குத் தேவையான டாலர் உலகப்பணமாகவும் அதனை மையப்படுத்திய உலக ஒழுங்கும் இருந்து வந்தது.
அடுத்த மாற்று எரிபொருளில் உற்பத்தியாகி இயங்கும் மின்னணு மின்கல பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்ப மூலதன பொருள்களின் உற்பத்தியை சீனா அடைந்து ரசியா, ஈரான் போன்ற நாடுகள் டாலர் அல்லாத நாணயங்களில் மரபான எரிபொருளை விற்க முனைந்த நிலையில் டாலர்மைய உலக ஒழுங்கு உடைப்பைக் கண்டு வந்தது. டாலரின் பங்கு வணிகத்தில் குறைந்து வந்தது. Iran wins war for regime change
இதனால் சந்தையில் டாலர் மூலதனம் மிகுந்திருந்த போது கொரோனா வந்தது. அந்தக் காலத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தவிர்க்க வெளியிடப்பட்ட டாலரும் சந்தைக்குள் நுழைந்ததால் சந்தை டாலர் மிகைமூலதனத்தால் நிரம்பி வழிந்தது.
அது உலகம் முழுக்க பாய்ந்து சொத்துகளின் மதிப்பை உயர்த்தி உலக நாணயங்களின் மதிப்பை நீர்த்து மக்களின் வருமானத்தைக் குறைத்து பொருள்களின் விலைவாசியை உயர்த்தி அதனை வாங்கி நுகர்ந்த மக்களின் வாங்கும்திறனைக் குறைத்ததால் பொருள் விற்பனை சரிந்து வருகிறது (விளக்கதிற்கு முந்தைய பகுதி 1ல் காண்க).
இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மாற்று உற்பத்தியில் ஈடுபடும் மதிப்புமிக்க சீனர்களின் சொத்தை டாலர் மூலதனம் அடைய முயல்கிறது. இப்படி டாலர்மைய உற்பத்தி உடைப்பைத் தடுத்து மாற்று உற்பத்தியின் சொத்துகளை அடைவதற்கான பொருளாதாரத் தேவைக்கான அமெரிக்கர்களின் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது.

ஈரானின் மீதான தாக்குதலின் நோக்கம்
சீனர்களுடனான வணிகப்போர், மின்னணு தொழில்நுட்ப போர்கள் தோல்வியடைந்த நிலையில் முந்தைய சனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகம் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முனைந்து ரசியாவைத் தூண்டி எழுந்த போரின் வழியாக ரசியாவைத் துண்டாடி நிலைகுலைய வைத்து அவர்களின் வளத்தையும் சந்தையையும் கைப்பற்றி டாலர்மைய எரிபொருள் ஒழுங்கைக் காக்க முனைந்தது. ரசிய வீழ்ச்சியில் தனிமைப்படும் சீனாவை வீழ்த்தி அடுத்து அதன் சொத்தைக் கைப்பற்றுவது அந்நோக்கத்தின் நீட்சி. அந்த ஆட்சிமாற்ற சீர்குலைவு முயற்சியில் தோல்வியடைந்து ரசியாவின் ஐரோப்பிய சந்தையை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. Iran wins war for regime change
அடுத்து வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசியர்களுடன் சேர்ந்து கொண்டு ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொண்டு ஈரானை விலக்கி சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. அதனை ஐரோப்பியர்கள் தடுத்துக் கொண்டு ரசியர்களும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் டாலர் அல்லாத நாணயத்தில் எரிபொருள் விற்கும் ஈரானின் பக்கம் திரும்பினார்கள். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருளை ஐரோப்பிய, இந்திய சந்தைகளுக்கு டாலரில் ஏற்றுமதி செய்து ஐரோப்பிய, மேற்காசிய, இந்தியப் பொருளாதார மண்டலத்தை (IMEC) ஏற்படுத்தி சீன, ரசிய நாடுகளைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அதன் மீது தாக்குதலைத் தொடுத்து இருக்கிறார்கள். Iran wins war for regime change

தாக்குதல் தந்திரங்கள், உத்திகள்
நோக்கத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் வளத்தைக் காத்து நிற்கும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் தலைமைகளையும் அணு ஆய்வு விஞ்ஞானிகளையும் கொன்று ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அழித்தும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வழியின்றி ஏவுகணைகளை ஏவும் ஏவூர்திகளை அழித்தும் அதிர்ச்சியூட்டி நிலைகுலைய வைத்தார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஈரானியர்கள் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்புரட்சியில் ஈடுபடவில்லை. மாறாக உடனடியாக இழப்புகளை ஏற்று மாற்று ஏற்படுகளைச் செய்து இசுரேலின் மீதான தாக்குதலைத் தொடங்கியது ஈரான்.
முதல் ஆட்சிமாற்ற நோக்கம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த எதிர்த்து தாக்கும் ஏவுகணை வலிமையை இல்லாமல் செய்யும் வகையில் ஏவூர்திகள், ஏவுகணை உற்பத்தி நிலைகள், ஆயுத சேமிப்பு கிடங்குகள், இராணுவ கட்டுப்பாட்டு மையங்களின் மீது இசுரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. எரிபொருள் ஏற்றுமதி மையங்களைத் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தைத் தகர்க்கலாம் என்றாலும் பதிலுக்கு எவரும் எரிபொருளை ஏற்றுமதி செய்யாதவாறு அவர்கள் ஹெர்முஸ் நீரிணையை மூடினால் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரம் தகர்க்கப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. Iran wins war for regime change
ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் விமானங்களை வீழ்த்த முடியாத நிலையில் அவர்களின் ஆயுத உற்பத்தி மற்றும் விமான தளத்தோடு அந்தச் சிறிய நாட்டைத் தாங்கி நிற்கும் மதிப்புமிக்க மின்னணு, உயிரியல், இராணுவ உற்பத்தி மற்றும் ஆய்வுக்கூடங்கள், வைர பங்குச்சந்தை மையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹைபா துறைமுகம் போன்ற பொருளாதார நிலைகளைத் தாக்கியது ஈரான். ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் செயலற்று போனதால் எந்த எதிர்ப்பும் இன்றி இசுரேலிய போர் விமானங்கள் புகுந்து அந்நாட்டைத் தாக்கின. அதேபோல இசுரேலின் மூன்று அடுக்கு இரும்புக் கவிகை (iron dome), டேவிட் கவண் (David sling), தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட முக்கிய நிலைகளைத் தாக்கி இசுரேலிய வான்வெளி பாதுகாப்பை உடைக்கும் வல்லமையைக் காட்டியது ஈரான். Iran wins war for regime change
இசுரேல் தாக்குதல் அளவைக் கூட்டுவதற்கு ஏற்ப மீவிரைவு ஏவுகணைகள் (hypersonic), அதிக சேதம் விளைவிக்கும் அரை டன் முதல் ஒன்றரை டன் வரை வெடிபொருள் நிரப்பிய ஏவுகணைகள் என ஒவ்வொன்றாக அனுப்பி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் எண்பது விழுக்காடு ஏவுகணைகளைத் தடுத்த இசுரேல் பின்னர் ஐம்பது 50-60 விழுக்காடு மட்டுமே தடுக்க முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்த தாக்குதலில் இசுரேலின் இரண்டாவது இலக்கான ஈரானின் ஏவுகணை வலிமையை உடைக்கும் முயற்சியும் தோல்வி அடைந்து ஏவுகணை எதிர்ப்பும் பலமிழந்து பெருமளவு சேதத்தை எதிர்கொண்ட நிலையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் தாக்குதல் பலத்தைக் கூட்ட அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்க வேண்டும் என்ற நிலை. Iran wins war for regime change

இறுதியில் வெற்றி யாருக்கு? Iran wins war for regime change
போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பாக பாதுகாப்பற்று நிற்கும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி அதன் அணு ஆயுத கட்டமைப்புகளை அழித்து மூன்றாவது நோக்கத்தையேனும் அடையும் சாத்தியம் இருந்தது. மற்ற நேரங்களில் அதிக எடைகொண்ட வெடிக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் பி-2 போர்விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்புண்டு. வலிமையான கிரானைட் பாறைகளாலான மலையின்கீழ் தொண்ணூறு மீட்டருக்கும் கீழ் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் நிலையத்தைத் தகர்க்க அணு குண்டுகளால் மட்டுமே முடியும். Iran wins war for regime change
அவ்வாறான அளவில் சிறிய போர்த்தந்திர குண்டை (strategic bomb) அமெரிக்கா பயன்படுத்தினால் உலகக் கண்டனங்களை எதிர்கொள்வதோடு மற்றவர்கள் பயன்படுத்தவும் வழிசெய்ததாகிவிடும். பதுங்குகுழிகளைத் தகர்க்கும் ஜிபியூ குண்டுகளைப் பயன்படுத்தினால் சுரங்கத்தைத் தகர்த்து செறிவூட்டும் நிலையத்தைச் செயலற்றதாக்க முடியும் என்று சொல்ல முடியாத குழப்ப நிலை. இறுதியில் நுழைவு வாயில்கள் சுரங்கத்துக்கான காற்றோட்ட திறப்புகள் உள்ள இடத்தில் குறிபார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசினால் குகை தாகர்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்து பன்னிரண்டு குண்டுகள் வீசப்பட்டது. Iran wins war for regime change
எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டதற்கான அறிகுறியான அணுக்கசிவு, பாறைகள் நொறுங்கி விழுந்த பள்ளம் என எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் வெற்றி என அறிவித்து ஈரானுடன் பேசி போர் நிறுத்தம் அறிவித்தது. இசுரேல் நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்; அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது அடையாளப்பூர்வமான தாக்குதல் நடத்துவோம் என்று பேசி வைத்துக்கொண்டு அவ்வாறே ஈரான் தாக்குதலும் நடத்தி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தெரிந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தி சேதம் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்தார். ஆனாலும் அங்கிருந்த பெரிய அலைக்கொடியைச் (antenna) சேதப்படுத்தி அமெரிக்கர்களின் எறிகணை எதிர்ப்பின் போதாமையை அம்பலப்படுத்தி தனது எறிகணை வலிமையையை ஈரான் காட்டி இருக்கிறது. Iran wins war for regime change
இறுதியில் ஆட்சி மாற்றம், ஏவுகணை வலிமையைத் தகர்த்தல், அணுவாயுத திட்டத்தை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களிலும் வெற்றியடையாமல் பின்வாங்கிய அமெரிக்க-இசுரேலிய நாடுகளின் ஈரானுடனான குறுகியகால போர் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. பெருமிழப்புகளைச் சந்தித்தாலும் எதிரிகள் தமது இலக்குகளை அடைய விடாமல் தடுத்து நிலைத்து நின்றதன் மூலம் ஈரான் இந்தப் போரில் வெற்றிபெற்று இருக்கிறது. Iran wins war for regime change

தோல்வியை அடுத்த மாற்றங்கள்
ஈரான்-இசுரேலிய மோதலின் மையம் இந்தப் பகுதியின் எரிபொருளை ஏற்றுமதி செய்தும், ஆசிய-ஐரோப்பிய வணிகத்தின் மையமாக விளங்கியும் அதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதுதான். இரண்டு நாடுகளின் அமைவிடம் அதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட, இசுரேல் ஈரானை நிலைகுலைக்க வைக்க முயல்வதைப்போல, ஈரான் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு தனது எதிர்த்தாக்குதலின் மூலம் எதிரியின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையை உடைத்து நிலைகுலைய வைப்பதாகவே இருக்கமுடியும். இசுரேலின் பொருளாதார இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நெதன்யாகுவின் அரசு நிலைக்கவும் அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் போர்களின் வழியாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரானின் நேரடியான ஏவுகணைத் தாக்குதல்கள் அதனை வேகப்படுத்தி இருக்கின்றன.
உயிருக்குப் பயந்து இரயில், மகிழுந்து நிறுத்தங்களில் படுக்கையை விரித்து படுக்கவைத்த ஈரானின் தாக்குதல் யூத மக்களின் மனதில் பாதுகாப்பின்மையை விதைத்து இருக்கிறது. அதனால் போர் நின்றால் அங்கே அரசியல் போராட்டம் வெடித்து அந்த அரசு நிலைக்கும் வாய்ப்பில்லை எனும் நிலையில் ஈரானின் போர்க்கள உத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க முடியும். Iran wins war for regime change
தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி அமெரிக்கர்களை உள்ளே கொண்டுவந்து அவர்களை மேற்காசியாவில் இருந்து வெளியேற்றி இருநாடுகளையும் ஒருசேர வெல்லும் வல்லமை ஈரானிடம் இல்லை. அப்படியான முடிவு போரை நீட்டித்து இசுரேலைக் காத்து ஈரானின் இழப்பை மேலும் கூட்டுவதாகவே இருக்கும். அவ்வாறான தவறைச் செய்யாமல் போர் நிறுத்த முடிவெடுத்து தற்காத்தல், தாக்குதல் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்று இருக்கிறது ஈரான். Iran wins war for regime change

ஆயுத வலிமை கொண்டு நடத்தப்படும் போரரசியல் உழைத்து உருவாக்கிய உற்பத்தி பொருள் செல்வத்தைக் காப்பது (defensive) உழைக்காமல் மற்றவர்களின் உற்பத்தி செல்வத்தைக் கைப்பற்றுவது (offensive) ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. சீன, ரசிய, ஈரானிய போர்களில் அமெரிக்காவின் தோல்வி அவர்களின் தகவல்தொடர்பு, நிதிய, போர்க் கருவிகளினாலான ஆயுதங்கள் கொள்ளையில் ஈடுபட்டு வெற்றிபெறும் வலிமையை இழந்து விட்டத்தையும் மற்ற நாடுகள் உற்பத்தியைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெருக்கிக் கொண்டதையும் காட்டுகிறது.
நேரடி, மறைமுகப் போர்களில் ஈடுபட்டு டிரில்லியன் கணக்கில் செலவுசெய்து தோற்றுவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் இனி சீன, ரசிய, ஈரானிய நாடுகளுடன் நேரடி போர்களில் ஈடுபட்டு மடிவது அல்லது தனது இடத்தை விட்டுக்கொடுத்து மற்றவர்களுடன் உலகைப் பகிர்ந்து கொண்டு இணையாக பல்துருவ உலகில் வாழ்வது ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும். போரில் வென்று உடைந்துவிட்ட டாலர்மைய ஒற்றைத்துருவ உலகை மீட்பது இனி சாத்தியமே இல்லை. ஓரிரு ஆண்டுகளில் புதிய உற்பத்தியைப் பெருக்கி அதற்கான உலக சந்தையைக் கைப்பற்றுவதும் சாத்தியமில்லை. இனி பேச்சுவார்த்தையின் மூலம் வரிவிதிப்பு போரைப் பயன்படுத்தி உருட்டி மிரட்டி இழப்பைக் குறைத்து பலனைக் கூட்ட மட்டுமே முடியும்.
எனவே புதிய பல்துருவ உலகமே எதார்த்தமானது. அதன் தொடக்கம் அனைத்து உற்பத்தி வலிமை மிக்க நாடுகளும் சமமாக பொதுவாக அவரவர் நாணயங்களில் வணிகம் செய்வது என்பதாக மாறிவிட்டது. இதன் முழுமை போர்கள் மற்றும் போராட்டத்தின் ஊடாக எல்லோர்க்கும் பொதுவான மதிப்பு விதியை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும். அப்படியான விதியின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முழுமையாக நடைமுறைக்கு வரும் நாள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஏகாதிபத்திய காலகட்டத்தின் இறுதியை அறிவிக்கும் நாளாகவும் அதனுள் கருவாகி உருவாகி வளர்ந்து நிற்கும் சோசலிச சமூகம் உறுதியாக சோசலிச மாற்றத்தை நோக்கி நகர்ந்து விட்டதை உறுதி செய்யும் நாளாகவும் இருக்கும். Iran
கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்
for regime change
