ஈரான் அலை அலையாக ஏவிய 100-க்கும் மேற்பட்ட டிரோன்கள்- நடுவானில் அழித்த இஸ்ரேல்!

Published On:

| By Mathi

Iran Israel

ஈரான் ராணுவம் ஏவிய 100-க்கும் மேற்பட்ட டிரோன்களை நடுவானிலேயே அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. Iran Launches Over 100 Drones in Waves

ஈரானுடனான அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஈரானின் மிக முக்கிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்துக்கு இணையான புரட்சி காவல் படையின் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது 100-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி அதிரடித் தாக்குதல் நடத்தியது ஈரான். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீதான ஈரானின் தாக்குதலில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே ஈரானின் 100-க்கும் மேற்பட்ட டிரோன்களை நடுவானிலேயே அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலின் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share