ADVERTISEMENT

ரஷ்யாவிடம் உதவி கேட்கும் ஈரான்… புதினுடன் ஆலோசனை!

Published On:

| By Selvam

இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்தநிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இன்று (ஜூன் 22) தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் தகர்த்தெறியப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. Iran Foreign Minister Araghchi will visit Moscow

இந்தநிலையில், ரஷ்ய அதிபர் புதினை ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி நாளை (ஜூன் 23) சந்திக்கவுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இஸ்தான்புல்லில் இன்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி செய்தியாளர்களிடம் பேசியபோது,

“இஸ்ரேல், அமெரிக்கா எங்கள் நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி எல்லை மீறிவிட்டனர். இது மிகவும் ஆபத்தான தாக்குதலாகும். அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டுமல்லாமல், இஸ்ரேலிய ஆட்சியின் பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக தேவையான அனைத்து வழிகளிலும் ஈரான் தங்களை பாதுகாக்கும்.

ADVERTISEMENT

இன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு செல்கிறேன். நாளை (ஜூன் 23) ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரமான ஆலோசனை நடத்த இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரின் ரஷ்யா பயணத்தை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து கவனித்து வருகிறது. Iran Foreign Minister Araghchi will visit Moscow

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share