தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Published On:

| By Prakash

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (அக்டோபர் 6) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில், சென்னை வடக்கு மண்டல ஐஜியாக இருந்த தேன்மொழி, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

ஆயுதப்படை பிரிவு ஐஜியாக இருந்த கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை பரங்கிமலை துணை ஆணையராக பதவி வகித்த பிரதீப், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5வது படைப்பிரிவு காமண்டர் தீபக் சிவாச், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டிருக்கிறார்.

மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10வது படைப்பிரிவு காமண்டர் சமய் சிங் மீனா, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் (கிழக்கு), சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் (கிழக்கு) குமார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10வது படைப்பிரிவு காமண்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ஜெ.பிரகாஷ்

கர்மா ஒரு காரணமா? தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்ற பெஞ்ச்!

மூன்று சிறுவர்கள் பரிதாப மரணம்: விசாரணைக் குழுக்கள் அமைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share