தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (அக்டோபர் 2) மதியம் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையராக சந்தோஷ் ஹதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த பதவியில் இருந்த செல்வநாகரத்தினம் பரங்கிமலை துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பரங்கிமலை துணை காவல் ஆணையராக இருந்த சுதாகர் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை எஸ்.பி பிரபாகர் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் அதிகரிப்பு… விசிக தீர்மானத்தில் தகவல்!
“மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்”: விசிக மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்