ADVERTISEMENT

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

ஜூன் 10 தேதியிட்ட அந்த உத்தரவில்,

“சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார் தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஆகவும்,

ADVERTISEMENT

கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக ஆகவும்

சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு அதிகாரி டிஐஜியாகவும்,

ADVERTISEMENT

சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் பேகர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும்

விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும்,

சேலம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும்

மாநில குற்ற ஆவண காப்பக கண்காணிப்பாளர் நாகஜோதி, தமிழ்நாடு சீருடை பணியாளார் தேர்வாணைய எஸ்.பியாகவும்,

சென்னை தலைமையக எஸ்.பி அமனத் மான், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் துணை ஐஜியாகவும்,

சென்னை பயிற்சி பள்ளி எஸ்.பி லாவண்யா, சென்னை குற்ற ஆவண காப்பக எஸ்.பி.யாகவும்,

சேலம் தலைமையக துணை ஆணையர் கீதா, சென்னை பெருநகர காவல் தலைமையக துணை ஆணையராகவும்

நெல்லை நகர் மேற்கு துணை ஆணையர் கீதா, சேலம் தலைமையக துணை ஆணையராகவும்

சேலம் நகர தெற்கு துணை ஆணையர் வேல் முருகன், சென்னை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராகவும்

சென்னை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பிரபாகர், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாகவும்,

நாகப்பட்டினம் எஸ்.பி.அருண் கபிலன், சென்னை தலைமையக துணை ஐஜியாகவும்

குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி செல்வகுமார், நாகப்பட்டினம் எஸ்.பி.யாகவும்,

தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர தெற்கு துணை ஆணையராகவும்,

குளச்சல் ஏஎஸ்பி சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் வடக்கு துணை ஆணையராகவும்

நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்ன குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share