ஹர்திக் பாண்டியா வருகையால் மும்பை அணியில் பல புதிய புயல்கள் உருவாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ipl2024 hardik bumrah Instagram
குஜராத் அணியுடனான கடும் சண்டைக்கு பின் நேற்று (நவம்பர் 27) ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்கு திரும்பியதாக மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடைசி கட்டத்தில் கேப்டன் ரோஹித், ஹர்திக் பாண்டியா அணிக்குள் வருவதை விரும்பவில்லை என்றும், அதுதான் ஹர்திக் விவகாரம் இவ்வளவு தூரம் போனதுக்கு காரணம் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஒரு புதிய புயல் பும்ரா ரூபத்தில் உருவாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அன்பாலோ செய்த பும்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்,
” சில நேரங்களில் அமைதியாக இருப்பதே ஒரு சிறந்த பதில் தான்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அவரின் இந்த பதிவு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
Jasprit Bumrah deserves better treatment. Bumrah performances are right up there for Mumbai indians.
Looks like Bumrah has unfollowed Mumbai indians and is looking for new franchises.Hardik deal is done without Rohit Sharma and Bumrah knowledge and it's Gona create more… pic.twitter.com/Odv7mrsFWa
— Sujeet Suman (@sujeetsuman1991) November 28, 2023
ஏற்கனவே ரோஹித், ஹர்திக் வருவதை விரும்பாத நிலையில் தற்போது பும்ராவின் இந்த செயல்களை வைத்து பார்த்தால் அவரும் ஹர்திக் வருகையை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது.
நீண்ட காலமாக மும்பை அணிக்கு ஆடிவரும் பும்ரா, ரோஹித்துக்கு பின் கேப்டனாக வாய்ப்புகள் அதிகம் இருந்ததையும் விமர்சகர்கள் இங்கு சுட்டிக்காட்டுகின்றனர். கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் என பிற அணிகளில் அடுத்தடுத்து பும்ராவுடன் ஆடியவர்கள் கேப்டன்களாக இருக்கின்றனர்.
அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பும்ரா கேப்டன் ஆகும் வாய்ப்பு இருந்தது. அது ஹர்திக் வருகையால் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. எனவே பும்ரா விரைவில் வேறு அணிக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை என ரசிகர்கள் இதுகுறித்த தங்கள் எண்ணங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் ஏலத்திற்கு முன்பாக அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதால் அதுவரை நாம் காத்திருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
திருச்சி தான் தலைநகரம்: எம்.ஜி.ஆர். வழியில் துரைமுருகன்
BiggBossDay57: அனன்யாவையும் விட்டு வைக்காத விஷ்ணு… பூர்ணிமாவை வெளியேற்ற மாயா பிளான்
ipl2024 hardik bumrah Instagram
