ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ஒரு விபரீத முடிவை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த , ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்குள் தோனி சர்வதேச போட்டியில் இருந்து வெளியே 5 ஆண்டுகள் ஆகிவிடும்.
ஐபி.எல் தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அந்த வீரரை இந்திய அணிக்காக ஆடாத வீரராக கருத வேண்டும் என்ற ஒரு விதி 2021 ஆம் ஆண்டு வரை இருந்தது.
தற்போது அந்த விதி நீக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதியை சிஎஸ்கே மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் இந்த விதியை பயன்படுத்தி தோனியை குறைந்த விலைக்கு ஒப்பந்தம் செய்து தக்க வைத்து கொள்ளலாம் என்றும் அந்த பணத்தை வைத்து மற்ற வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிஸ் அணி திட்டம் போடுகிறது.
தோனியை இந்திய அணிக்காக விளையாடாத வீரர் என்ற வரிசையில் சேர்த்தால் உண்மையாகவே இந்திய அணிக்கு விளையாடாத ஒரு வீரரின் இடம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரரின் இடத்தை சிஎஸ்கே பறிக்க வேண்டுமா? என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளளனர்.
தோனி போன்ற ஜாம்பவான் வீரர்களை இந்த விதியை பயன்படுத்தி தங்களுடைய ஆளுமையை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிஎஸ்கே வின் இந்த முடிவை பின்பற்றி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு அணியும் இப்படி செய்தால் பல இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறுகையில், “தோனி இந்த விதியின் கீழ் விளையாட முதலில் ஒப்புக் கொள்வாரா? என்று தெரியவில்லை. ஆனால் நீண்ட காலமாக அவர் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை என்பது உண்மைதானே. இதனால், அந்த விதியின் கீழ் அவர் விளையாடுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-எம்.குமரேசன்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட காரணம் தெரியுமா? இ சாலா அணியின் முன்னாள் கேப்டன்தான்!
ஆளுநர் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் புறக்கணிப்பு!