அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று (அக்டோபர் 31) மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஒவ்வொரு அணியும் தங்கள் 2024 அணியில் இருந்து அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி) ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ.13 கோடி), சிவம் துபே (ரூ.12 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரராக எம்.எஸ் தோனியை (ரூ.4 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ளது. வீரர்களை தக்கவைக்க 65 கோடி ரூபாய் செலவழித்துள்ள சென்னை அணி, மீதமுள்ள ரூ.55 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்!
விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி) யஷ் தயாள் (ரூ.5 கோடி) ஆகிய மூவரை மட்டுமே ஆர்.சி.பி அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் 37 கோடியை செலவழித்துள்ள பெங்களூரு, மீதம் 83 கோடி ரூபாயை ஏலத்திற்காக கைவசம் வைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் :
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா(ரூ.18 கோடி), சூர்ய குமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா(ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி) மற்றும் திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் வீரர்களை தக்க வைக்க 75 கோடி ரூபாய் செலவழித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்திற்காக 45 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் :
ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி) ஆகிய இரு அன்கேப் வீரர்களை மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 9.5 கோடி செலவழித்துள்ள நிலையில், அதிகபட்சமாக ஏலத்திற்கு 110 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் :
அக்சர் படேல் (ரூ.16.5 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), ஆகியோருடன் அன்கேப் வீரராக அபிஷேக் போரல் (4 கோடி) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் ரூ.43.75 கோடியை செலவழித்து, ஏலத்திற்காக 76.25 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :
எல்எஸ்ஜி அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக மோசின் கான் மற்றும் ஆயுஷ் படோனி தலா ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.51 கோடியை செலவழித்து, 69 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது லக்னோ.
ராஜஸ்தான் ராயல்ஸ் :

குஜராத் டைட்டன்ஸ் :
கேப்டன் ரஷித் கான் (ரூ.18 கோடி), சுப்மன் கில் (ரூ.16.5 கோடி), சாய் சுதர்சன் (ரூ.8.5 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக ராகுல் தெவாடியா மற்றும் ஷாருக்கானை தலா ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது குஜராத் அணி. மொத்தம் 51 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு ஆர்டிஎம் மற்றும் 69 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது ஜி.டி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் பீஸ்… பண மழையில் ஐ.பி.எல் வீரர்கள்… சென்னை அணியில் யார் யார்?