ஐ.பி.எல்: வரலாற்று சாதனை படைத்த தோனி

Published On:

| By Jegadeesh

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி புது சாதனையை படைத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே லீக் போட்டி இன்று (ஏப்ரல் 3) நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ADVERTISEMENT

சென்னை அணிக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடக்கும் போட்டி இது. அதுமட்டுமின்றி, சொந்த மண்ணில் அவர்கள் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினார்கள்.

ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை எடுத்து அவுட்டாகினார்.அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே அவுட்டானார் டெவோன் கான்வே. பின்னர், களத்தில் ஷிவம் துபேவும் மொயீன் அலியும் இருந்தார்கள்.

ADVERTISEMENT

11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 120 ரன்களை எடுத்திருந்தது. ஷிவம் துபே ஆட்டத்தைத் தொடங்கிய முதல் ஓவரில் நிதானமாக நின்றுகொண்டிருந்தவர், 13வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 14வது ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார்.

இந்நிலையில், கடைசி ஓவரில் 8ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அவர் எதிர்கொண்ட 3வது பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்த 7 வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் எம்.எஸ்.தோனி. இதுவரை ஐபிஎல் போட்டியில் மட்டும் தோனி 5004 ரன்கள் குவித்துள்ளார்.

ADVERTISEMENT

மு.வா.ஜெகதீஸ் குமார்

சூர்யா – ஜோதிகா: தென்மண்டல ஐஜியிடம் புகார்!

மதுரை மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share