லக்னோ அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்றது. RCB Top 2 Qualified to Play Qualifier 1
நடப்பு ஐபிஎல் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி லக்னோ வாஜ்பாயி மைதானத்தில் இன்று (மே 27) நடைபெற்றது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்தது.
இந்த தொடரில் தொடர்ந்து தடுமாறி வந்த ரிஷப் பண்ட், இப்போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல், 61 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 118 ரன்கள் அடித்து அசத்தினார். அவருக்கு துணையாக மிட்செல் மார்ஷும் 67 ரன்கள் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து டாப் 2 இடத்தை பிடிக்க, 228 என்ற இலக்கை சேஸ் செய்ய தொடங்கியது பெங்களூரு அணி. அந்த அணியில் துவக்க வீரர்களான விராட் மற்றும் சால்ட் (30) அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் குவித்தனர்.
சால்ட்டை தொடர்ந்து அடுத்து இறங்கிய படிதார் (14) மற்றும் லிவிங்ஸ்டரன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
எனினும் தனது கிளாசிக் பேட்டிங்கை தொடர்ந்த விராட் கோலி (54) தனது 62வது அரைசதத்தை பதிவு செய்தார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் (41*) மற்றும் கேப்டன் ஜிதேஷ் சர்மா (85*) இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக பேட்டை சுழற்றி அணியை வெற்றி பெற வைத்தனர்.
அந்த அணி 18.4 ஓவர்களில் 230 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்றனர். RCB Top 2 Qualified to Play Qualifier 1
