’ஒரு கட்டத்தில் குஜராத் வெற்றியை நோக்கிச் சென்றது… ஆனால்,’ – வெற்றி குறித்து ஹர்திக் பேச்சு!

Published On:

| By christopher

Hardik Pandya Interview after MI Win

ண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நேற்று (மே 30) இரவு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். Hardik Pandya Interview after MI Win

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி போராடிய குஜராத் அணி, 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் வரும் 1ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் அணியை சந்திக்க தகுதி பெற்றுள்ளது மும்பை அணி.

இதற்கிடையே போட்டிக்கு பின்னர் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், “ஒரு கட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் சிறப்பாக இருந்ததாக நான் நினைத்தேன். அது அவர்களின் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. வெற்றியை நோக்கி சென்றனர். எனினும் எங்களின் பதற்றத்தை அகற்றி அவர்களை கட்டுப்படுத்த முடிவு செய்தோம்.

இந்த போட்டியில் எங்களுக்காக அறிமுகமாக ஜானி பேர்ஸ்டோ பேட்டிங் செய்த விதம் அருமையானது. அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதே போன்று ரோகித் பேட்டிங் செய்த விதம், முதலில் தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டார். பின் ரிதமுக்கு வந்து, சூப்பராக பேட்டிங் செய்தார். அதை பார்ப்பதற்கு அழகாக இருந்தது.

க்ளீசன், பும்ரா, அஸ்வினி எல்லோரும் நன்றாக விளையாடினர். நாங்கள் எங்கள் பதற்றத்தைக் கட்டுப்படுத்தி விளையாடினோம்.

நாங்கள் பேட்டிங்கில் முன்னேற விரும்பினோம், அதைச் செய்ய முடிந்தது என்று நினைக்கிறேன். பும்ராவை பந்து வீச அழைப்பது மிகவும் எளிது. விளையாட்டு கையை விட்டு போகிறது என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம், அவரை பந்துவீச அழைக்கலாம். அப்படிதான் ஜாஸி வந்து 18வது ஓவரை வீசுவது முக்கியம் என நினைத்தேன். அவர் மும்பை அணியின் மிகவும் விலை உயர்ந்த சொத்து. Hardik Pandya Interview after MI Win

அடுத்த போட்டி முக்கியமானது. அதற்கு முன் வீரர்கள் ஓய்வும் முக்கியம். வரும் ஆட்டங்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.” என ஹர்திக் தெரிவித்தார். Hardik Pandya Interview after MI Win

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share