2024 ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ ஆயுஷ் பதோனி, நிகோலஸ் பூரன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 165 ரன்கள் சேர்த்தது.
ஆனால், டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால், ஒரு விக்கெட்டை கூட இழக்காமல், இந்த இலக்கை ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டியது.
இதை தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா, மைதானத்தில் வைத்தே அந்த அணியின் கேப்டனான கே.எல்.ராகுலுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சீவ் கோயன்காவின் செயலை கடுமையாக விமர்சித்தனர்.
https://twitter.com/satishacharya/status/1788542033399095352
இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கு அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதன் காரணமாக 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடக்கவுள்ள மெகா ஆக்சனில், கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்கவைக்கப் போவதில்லை என்றும் ஒரு தகவல் வெளியானது.
அதுமட்டுமின்றி, அடுத்த போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஒரு புதிய கேப்டனை லக்னோ அணி நியமிக்கலாம் என்றும் ஒரு தகவல் வெளியானது.
இப்படியான சூழலில், கே.எல்.ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியான இந்த தகவல்கள் அனைத்தும் பொய்யே என ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயன்கா இடையேயான உறவு சுமூகமாகவே உள்ளது என்றும், அந்த அணி நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: அழகை அதிகரிக்க உதவும் மாம்பழக் கூழ்!
கிச்சன் கீர்த்தனா : வாழைத்தண்டு ஸ்நாக்ஸ்
ஆகஸ்ட் 15க்குள் 30 லட்சம் வேலைகள்… இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்த ராகுல்