கேப்டன் கூல் என புகழப்படும் தோனி எந்த விஷயத்துக்கு கோபம் கொள்வார்? என, சென்னை அணியின் முன்னாள் வீரர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடப்பு சாம்பியன் சென்னை அணி வருகின்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒருமுறை தோனியின் கீழ் களம் காணவுள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரு அணியின் கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை அவர் படைக்கவுள்ளார்.
Matthew Hayden on what irritates MS Dhoni. pic.twitter.com/R1Zlo25slN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 11, 2023
இந்த நிலையில் தோனி குறித்த முக்கியமான விஷயம் ஒன்றை சென்னை அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர், ”போட்டியில் தோல்வி அடைந்தால் கூட தோனி கோபம் கொள்ள மாட்டார்.
ஆனால் பீல்டிங்கில் கோட்டை விட்டால் கடும் கோபம் வந்து திட்டி விடுவார். போட்டியின் போது களத்தில் உள்ள வீரர்கள் தோனியை பார்த்து அவரின் சைகைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்,” என தெரிவித்து இருக்கிறார்.
அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை அணி பெங்களூர் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா