2024 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 அன்று துவங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே, ஐபிஎல் தொடரின் ஒரு எல் கிளாசிகோவாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியின் ஆட்டம் நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அந்த நாளை நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலின் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அதை கருத்தில் கொண்டு, முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
இதில், ஐபிஎல் தொடரின் மற்றொரு எல் கிளாசிகோவான சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டி இந்த முதற்கட்ட அட்டவணையில் இடம்பெறாதது, ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தம் 16 வருடங்களை முடித்து 17-வது ஆண்டில் ஐபிஎல் அடியெடுத்து வைக்கிறது. இடையில் சில அணிகள் வந்து போயுள்ளன. சில அணிகள் இன்றும் நிரந்தரமாக உள்ளன. மொத்தம் இந்த 16 வருடங்களில் 15 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளன.
இதில் தற்போது 1௦ அணிகள் மட்டுமே வருகின்ற 2௦24 ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளன. அந்தவகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திய அணிகள் எதுவென இங்கே பார்க்கலாம்.
இந்த பட்டியலை பொறுத்தவரை, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 138 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
2-வது இடத்தில், 131 வெற்றிகளுடன் மும்பையை போலவே 5 முறை கோப்பையை வென்ற ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
இதேபோல 2 முறை கோப்பையை தன்வசமாக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 119 வெற்றிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதில் விராட் கோலியின் சிவப்புப் படையான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 114 வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
வெற்றிகளின் அடிப்படையில் அணிகளின் தரவரிசை
1) மும்பை இந்தியன்ஸ் – 138 (247) – 55.87%
2) சென்னை சூப்பர் கிங்ஸ் – 131 (225) – 58.22%
3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 119 (240) – 49.58%
4) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 114 (242) – 47.11%
5) டெல்லி கேப்பிடல்ஸ் – 105 (239) – 43.93%
6) பஞ்சாப் கிங்ஸ் – 104 (232) – 44.83%
7) ராஜஸ்தான் ராயல்ஸ் – 101 (208) – 48.56%
8) சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 78 (166) – 46.99%
9) டெக்கான் சார்ஜர்ஸ் – 29 (76) – 38.16%
10) குஜராத் டைட்டன்ஸ் – 23 (33) – 69.7%
11) லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் – 17 (30) – 56.67%
12) ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் – 15 (30) – 50%
13) குஜராத் லயன்ஸ் – 13 (30) – 43.33%
14) புனே வாரியர்ஸ் இந்தியா – 12 (46) – 26.09%
15) கொச்சி டஸ்கர்ஸ் கேரளா – 6 (14) – 42.86%
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார் பதவியேற்பு
தேர்தல் பத்திரம் வழக்கு: எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!