ஐபிஎல் 2024: குஜராத்தை அசால்டாக தட்டி தூக்கிய RCB

Published On:

| By indhu

IPL 2024: RCB won Gujarat Titans

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது RCB அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 28) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைட்டன் அணிக்கும் போட்டி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் டுபிளசிஸ் பந்துவிச்சை தேர்வு செய்தார்.

அந்த வகையில் முதலில் போட்டிங் செய்த குஜராத் அணி தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் சுப்மன் கில் 16 (19) ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய சாருக் ஹான் 58 ரன்களும், டேவிட் மில்லர் 26 ரன்களும் எடுத்தனர்.

அந்த வகையில், 2௦ ஓவர் முடிவில் குஜராத் டைட்டன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது.

ADVERTISEMENT

பந்துவீசிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முகமது சிராஜ், ஸ்வாப்னில் சிங் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற பெங்களூரு அணிக்கு 201 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டுபிளசிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்தில் இருந்த விராட் கோலி 70 ரன்களும், வில் ஜாக்ஸ் 100 ரன்களும் எடுத்து 16 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து குஜராத் அணியை அசால்டாக வென்றது RCB.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னையில் சினிமாவை மிஞ்சும் திக் திக் காட்சி… மேற்கூரையில் தவறி விழுந்த குழந்தை -அடுத்து என்ன நடந்தது?

விண்ணைத் தாண்டி வருவாயா? அமெரிக்கா Vs ரஷ்யா… Space மோதல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share