நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற பெங்களூரு – ஹைதராபாத் இடையிலான ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
மும்பைக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்த அந்த அணி, பெங்களூருக்கு எதிராக 287 ரன்களைக் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
அதோடு சென்னை, மும்பை, பெங்களூரு என வரிசையாக எதிரணிகளை வீழ்த்தி, புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் சாதனையும் படைத்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு பிளே ஆஃப்பில் பிற அணிகளுக்கு ஹைதராபாத் கடும் சவாலாக இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக நேற்றைய போட்டியில், ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 1௦2 ரன்களைக் குவித்து, தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தினைப் பதிவு செய்தார்.
இதேபோல மற்றொரு அதிரடி வீரர் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்களைக் குவித்து அணிக்கு உறுதுணையாக இருந்தார்.
இவர்களின் அதிரடியால் 2௦ ஓவர்கள் முடிவில் வெறும் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை அந்த அணி எடுத்தது.
இந்தநிலையில் தங்களின் வெற்றி ரகசியம் குறித்து ஹைதராபாத் வீரர் கிளாசன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்?
இதுகுறித்து அவர், ”முடிந்தளவு பவர்பிளேயில் ரன்களைக் குவிக்க வேண்டும் என்பது தான் எங்களது திட்டமாக இருந்தது.
ஏனெனில் முதல் 6 ஓவர்களில் 2 பீல்டர்கள் தான் வெளியில் நிற்பார்கள். இதனால் முடிந்தளவு 36௦ டிகிரியிலும் சுற்றிச்சுழன்று அடிக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டேன்.
கடைசி 2 போட்டிகளில் என்னால் அப்படி ஆட முடியாமல் போய்விட்டது. ஆனால் பெங்களூருக்கு எதிரான போட்டியில் நான் நினைத்தபடி ஆடி ரன்களைக் குவித்தேன்.
ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை மூன்று அல்லது நான்கு நல்ல ஓவர்களை கட்டுக்கோப்பாக வீச வேண்டும்.
அந்தவகையில் கேப்டன் பேட் கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசினார். தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் நம்பமுடியாத வகையில் இருந்தது.
என்றாலும் 13௦ ரன்களுக்கு உள்ளாகவே நாங்கள் 5 விக்கெட்டுகளை எடுத்ததால், ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது என்றார்.
ஹைதராபாத் அணி கடைசி 6 போட்டிகளிலும் (65/1, 81/1, 58/1, 78/1, 40/3, 76/0) பெரிதாக விக்கெட்டுகளை இழக்காமல், பவர்பிளேயில் சிறப்பாக ரன்களைக் குவித்துள்ளது. இதுவே அவர்களின் வெற்றிக்கும் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்?
Video : மாஸாக களமிறங்கிய ‘மைக்’ மோகன்… டீசர் சும்மா தெறிக்குது!